முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
உரைமன மிறந்தவொரு தனிநிலைமை யிதுவென்ன
       உள்ளபடி முனிவர்நால்வ
ருணர்ந்திட வணர்த்துதற் குற்றதவ யோகத்தி
       னொண்ணுதற் கண்டிறந்து
பொருமதனை வென்றனன் பரமனென் கின்றசிறு
       புகழன்றி யோகநிலைமை
பொன்றியங் கவன்வென்றி கொள்ளலாற் படுதோல்வி
       பொன்றலற வெய்தினனெனும்
வரைவில்சிறு மொழிபுகா தெண்ணிலோ ருணரவரு
       மறைமுடி வுணர்த்தி வெய்ய
மதனன்வந் தொருகணமு மெதிர்நிலா தொழுகுதவ
       மாயாத நிலையினுடனித்
தரையினிடை வந்தருளு மெம்பரம யோகியே
       சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
       சப்பாணி கொட்டியருளே.
(5)
வேறு
பெருவாழ் வுற்றிடு தீயர்செ ருக்குல கிற்கோரிற்
       பிழையாய் முற்றிடு மாறென நத்திட ருற்றாழ
விரைதேர் புட்குலம் வாயிரை யிட்டிரி யக்காவி
       யிதழ்சா யத்தடு மாறி வரிக்கயல் கெட்டோட
வெருவா மொய்த்திசை பாடளி மட்டுணல் விட்டேக
       விளையா டித்தட வாளை குதித்தெழு பொற்பாய
திருவார் கச்சியர் நாயக கொட்டுக சப்பாணி
       சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
(6)
குருநீ பத்தொடை யாளி யெதிர்த்த விறற்சூர
       குருமாள் வித்தவன் வாழ்மயி லைக்கிரி பொற்பார
வருநீர் மைக்கரு ணாகர கொட்டுக சப்பாணி
       மலமா யைப்பகை யானவ கொட்டுக சப்பாணி
கருநீர் மைத்திரு மாலடி யுய்க்குமெ னப்பூசு
       கவர்நா மக்குறி சேர்தரு நெற்றிது டைத்தீசர்
திருநீ றிட்டிடு மாதவ கொட்டுக சப்பாணி
       சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
(7)

5. பொருமதன்-போர் செய்த காமன். பொன்றி அங்கு அவன் வென்றி கொள்ளலால்-பரமனுடைய யோக நிலை முடிவுற்றபடியால் காமன் வென்றனன் என்க. 6. இரிய-அஞ்சியோட. இசைபாடு அணி-இசைபாடுகிற வண்டுக் கூட்டங்கள். மட்டுணல்-தேனுண்டல். 7. குரு-நிறம். நீபத்தொடை-கடப்பமாலை. மாயைப் பகையானவ-மாயைக்குப் பகையானவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்