| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
ஒருமா தர்ப்பிறை வாணுதன் மைக்கண் மலர்க்கோதை யுமைகா ணக்கம லாலய னொத்துற நற்றாளம் வருமான் வத்திர னார்கொளு மத்தள முற்பேச மகிழ்வீ ணைத்தொழி லாரிசை யொத்திசை யப்பாட இருமா தர்க்குயி ராமுரு கற்பெறு நிட்காம விறையா டப்புல வோர்புனை மெய்க்கவி தைப்பேர்கொள் திருமா லைப்புய மாதவ கொட்டுக சப்பாணி சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
|
(8) |
| |
| |
எளியா ரைப்பெறின் மேனிப தைப்ப வலைத்தாவி யெதிர்வா ரைப்பெறி னோடு மறச்சிறி யர்ப்போல ஒளியா முற்சிறு மீனெதி ரக்கவர் வுற்றாடி யுகள்சே லுற்றிட வாயிரை கக்குபு கொக்கோடும் அளியார் மட்டலர் வாவியு டுத்தற நற்சாலை யழகார் கச்சிநி வாச கருத்தும ருட்பாடு தெனியார் கட்கரு ணீர்மைய கொட்டுக சப்பாணி சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
|
(9) |
| |
| |
புதையா மெய்ப்பொரு ளீகைய கொட்டுக சப்பாணி பொழில்சூழ் கச்சியின் வாழ்பவ கொட்டுக சப்பாணி மதயா னைப்பொறி காவல கொட்டுக சப்பாணி மறைவாய் மைத்திரு வாசக கொட்டுக சப்பாணி சுதையா மெய்ப்பொடி மேனிய கொட்டுக சப்பாணி தொழுவார் கட்கரு டேசிக கொட்டுக சப்பாணி சிதையா நற்குண தாபத கொட்டுக சப்பாணி சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.
|
(10) |
| |
|
| |
8. இரு மாதர்க்கு-வள்ளி தெய்வயானை யென்னும் இருபெண்களுக்கு. நிட்காமவிறை-எத்தகைய அவாவுமற்ற பரமன். 9. அலைத்து-வருத்தி. அறச் சிறியர்-மிகச் சிறியவர். கக்குபு-கக்கவிட்டு அளியார்-வண்டுகள் பொருந்திய. மட்டலர்-தேன்மலர். 10. மெய்ப்பொருளீகைய-உண்மைப் பொருளைக் கொடுப்பவனே! மெய்ப்பொடி மேனிய-திருநீறு பூசிய உடலையுடையவனே. தாபதர்-முனிவர்.
|
|
|
|