| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
கற்ற புலவர் மிகச்சிறந்து காட்டு மொன்றன் வளமெடுத்துக் கவியால் விரித்துப் புகன்றியம்பக் கருதி யதுபொற் குன்றநாண் உற்ற மணிப்பொற் கோபுரமோ வொளிர்பொன் மாட மோமுகில்வந் துறங்கு மதிலோ மாளிகையோ வுலவு திருத்தேர் மறுகோசீர் பெற்ற குடிகண் மனைவளமோ பிரச மலர்த்தண் டலையோநீர் பெருகு தடமோ வெனவிறைவி பிறங்கு கோயிற் றிசைபோல முற்ற மயங்குஞ் சீர்க்காஞ்சி முதல்வா முத்தந் தருகவே முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.
|
(4) |
| |
| |
இணையி றிருவள் ளுவப்பெயர்கொ ளெம்மான் கரப்பா ரிரவன்மி னென்ன விரந்து மிரத்தக்கார்க் காணி னிரக்க வென்றுரைத்தும் உணர்வு தெருள்வித் தமைகொண்டே யொருவர் தமையு மிவ்வளவு மொன்று மிரந்தா மல்லமியா முன்னை யின்றீங் கிரக்கின்றாம் அணையு மவர்தம் முகக்குறிப்பா னறிந்தங் கவர்த மகம்விழைந்த வனைத்து மமுத முறழீர மளைந்த வின்சொ லுடனளிக்கும் முணையில் கொடைச்சிந் தாமணியே முகிலே முத்தந் தருகவே முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.
|
(5) |
| |
| வேறு |
| |
| |
அதிர்செய் கடலகன் ஞால முடியர விற்கெலா மரசு நடுமுடி யீனு மெழுசுடர் வட்குமோர் கதிர்கொள் புதுமணி கோடு கொடுமிடி யுற்றுளார் கடையு மணிகொடு வீசு மவரென நிற்றறீர் துதியி லுடல்பொரு ளாவி கொடுதமி யற்குமா சுருதி முடிவுறு மாசில் பொருளுத வுற்றகூன் மதியின் முடிமதி யாள பணிமணி முத்தமே மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
|
(6) |
| |
|
| |
4. பொன் குன்றம் நாண் உற்ற-மகா மேருமலை வெட்கத்தையடைந்த. பிரசமலர்-தேன் பொருந்திய மலர். பிறங்கு கோயில்-விளங்குகின்ற கோயில். 5. முதலிரண்டடிகளில் இரண்டு திருக்குறள்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன. கரப்பார்-ஒளிப்பவர். இரத்தக்கார்-இரக்கத் தகுதியுடையவர்கள். தெருள்வித்தமை-தெளியச் செய்தமை. அகம்-உள்ளம். ஈரம் அளைந்த-அன்பு கலந்த. முணை-வெறுப்பு. 6. வட்கும்-வெட்கும். கொடு மிடி-கொடிய வறுமை. கருதி முடிவுறு-வேதாந்தத்தில் பொருந்திய. ஆசில் பொருள்-குற்ற மற்ற மெய்ப்பொருள். பணிமணி-நாகரத்தினம்.
|
|
|
|