முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
போற்ற வருக வடிமையேம் புகழ வருக நறியமலர்
       புனைய வருக வருண்மாரி பொழிய வருக வடிகடலை
ஏற்ற வருக மவுனமொழி யிசைப்ப வருக வெமதுளத்தி
       னிருப்ப வருக வறங்கடலை யெடுப்ப வருக நீற்றழகு
தோற்ற வருக வெங்கண்மய றுரப்ப வருக கொடுங்காமந்
       துடைப்ப வருக கூற்றுவலி தொலைப்ப வருக பிறவிநோய்
மாற்ற வருக வறிவுருவில் வைப்ப வருக வருகவே
       மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
(7)
அற்றங் களையு நின்பெருஞ்சீ ரறைந்த செந்தா விவ்வுலகி
       லயலோர் மொழியு மறையாம லன்பா னின்பாற் பற்றுமுளம்
பற்றொன் றிங்கட் செயாமலுனைப் பார்த்த விழிகள் பிறபொருளைப்
       பாரா துன்சொற் கேட்டசெவி பயனில் பிறசொற் கேளாமல்
உற்றுன் றிருத்தாட் குற்றேவ லுஞற்று கரங்கள் பிறிதொன்றை
       யுஞற்றா துள்ள படிசுட்டா துன்னை யுணர்ந்த பேருணர்வு
மற்றொன் றினையிங் குணராமல் வந்த குரவா வருகவே
       மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
(8)
வேறு
முட்டு மார்புல னாய சேனைகண் முறியமான்
       முற்று நானெனும் வேழ மாய்வுற மனமென்மா
பட்டு வீழ்தர வாவி யாமர சுடையவே
       பற்றி ஞானநல் வாளி னாலொரு தமியனாய்
வெட்டு பாணிய னான லாலய லிலையெனா
       வெற்றி யாலறி வாகு மோர்நக ரிமையுளே
கட்டு மாறெதிர் மாறில் சேவகன் வருகவே
       கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.
(9)

7. அடிகள் தலையேற்ற-அடிகளைத் தலையிற்சூட. அறங்கள் தலையெடுப்ப-தருமங்கள் தலைதூக்க. துரப்ப-துரத்த.8. அற்றம்-குற்றம். இங்கண்-இவ்வுலகில். உஞற்று கரங்கள்-செய்கிற கைகள். 9. முட்டும்-நெருக்கும். மால்முற்றும்-மயக்கம் பெருகும். வேழம்-யானை. நான்எனும் வேழம் : உருவகம். மனம் என்மா-மனம் என்ற விலங்கு. பாணியன்-கையை உடையவன். அயல்-வேறு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்