| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
பற்றி லாவுணர் வாகி மாமன மருவியே பற்று வாள்விழி யாறு சேர்புகை தனில்வரா உற்றி லாதமர் ஞான நாயகன் வருகவே யொப்பி லாவருண் மூல காரணன் வருகவே முற்றி லாமுலை மாத ரால்வரு மயலறா முத்தி சேர்வுறு மாறு தீதறு துணிவுநூல் கற்றி லாரறி யாத சீரியன் வருகவே கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.
|
(10) |
| |
| |
வித்து வான்வர வால லாதொரு பிறிதினான் மிக்க வாழ்வுபெ றாத வாறென வடியரேம் அத்து வாமுடி வான நீவரு வரவுதா னற்று வேறுள வேது வாலுள மகிழ்வுறேம் முத்து வாளர வீனு மாமணி மிகுகுவான் முற்று மாமதி ஞாயி றாமெனு மயிலைவாழ் கத்து வாதமி லாத போதகன் வருகவே கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.
|
(11) |
| |
|
| |
10. பற்றிலா உணர்வு-பற்றற்ற அறிவு. முற்றிலா முலை-இளமுலை. 11. வாள் அரவு ஈனும் மாமணி-ஒளி தங்கியபாம்பு அளிக்கும் சிறந்த மணி. குவால்-குவியல். கத்துவாதம்-வீணாகக் கூச்சலிடுகிற சொற்போர்.
|
|
|
|