| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
உந்துமா ரருள்பிறந் தெழுதரு மிவன்றிரு வுள்ளத்து முனிவில்லையென் றுன்னல்சிறு விதிமகத் துறுமமரர் தம்மையு முன்றனையு மமர்குறித்து வந்தமா மதனையுங் கண்புன றுளிப்பவே மனமுருகி மெய்யன்பினான் மலர்கொண்டு பூசனை தொடங்குமொரு தொண்டன்மேல் வஞ்சினங் கொண்டுவெம்பிச் சிந்துமா ரழல்விழிப் பணைமருப் பெருமையிற் சென்றகொடு மறலிதனையுஞ் சிரமைந்தொ டைந்துடைய திரள்புயத் தெறுழ்வலித் தீயனையு முன்வெகுண்ட அந்தவா சனையிருப் பினுமிருக் குங்கடிதி னம்புலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(4) |
| |
| |
நெடிமைகொண் டவிர்பவள வார்சடைக் கற்றையு நெளிதிரைக் கங்கைநதியு நெட்டுடற் கட்செவிப் பணியுமத னைத்தெறு நெற்றிமிசை யொற்றைவிழியும் கடிமைகொண் டிடுகவைக் கானெடும் பகடுந்து காளமே கம்புரையுமோர் காலனுயிர் கொண்டசெங் கமலமல ரடியின்மால் கண்ணுநீ காணாமையால் மடிமைகொண் டிங்கழைத் திடவுமொரு மனிததென வாரா திராதிகண்டாய் வழங்குமுடல் பொருளாவி கைக்கொண்டு மருளாது மனிதரைத் தனதருளினால் அடிமைகொண் டிடவந்த கள்ளவடி வினன்விரைந் தம்புலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(5) |
| |
|
| |
4. உந்தும்-செலுத்தும். உன்னல்-எண்ணாதே. சிறுவிதி மகம்-தக்கன் வேள்வி. தொண்டன்-மார்க்கண்டன். எறுழ் வலித்தீயன்-மிகுந்த ஆற்றலையுடைய இராவணன். 5. நெட்டுடல்-நீண்டவுடல். மதனைத் தெறும்-காமனையழிக்கும். கடிமை-கடினத்தன்மை. காளமேகம்-நீருண்ட கரிய முகில். மடிமை-சோம்பற்றன்மை.
|
|
|
|