| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
நறியமலர் விழிசிவந் துனைவருக வென்றில னடந்ததங் ஙனமாயின்யா நணுகவரு வாயென வழைத்தெதிர் விடுக்கில நாண்மலருன் முகமலர்ந்து சிறியநகை யிளநில வெறிப்பவரு கென்றனன் செயற்கைவடி விதுவன்றுதன் றிருமுடி யணிந்திஃ தியற்கைவடி வெனமனத் தெருள்விலார்த் தெருள் விக்கவோ வறியவுரு வாமிரவி யெதிர்மழுக் குறுசிறுமை மாற்றியொளி பெறவைப்பவோ மாசுட றுடைப்பவோ குறைதவிர்த் தருளவோ மனத்திவர் நினைத்தநினைவை அறியகில மறியாமை யறவருளு குரவனுட னம்புலீ யாடவாவே யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே.
|
(6) |
| |
| வேறு |
| |
| |
ஏதி லார்களிகழ் காம நோயதுற வேற றங்கடை யுடையநா மேது போவதென வேயி ராதிமுன மீறில் வெம்பவ மருவுமோர் தீ தி னானினிற நாம னாமொருவன் ஞானி யங்கழல் செறியவே தேறி நீவருதி யாலெ னாவினைக டீகொள் பஞ்சென வழியநால் வேத மாமுடியி னோது மோர்பொருளை மேனி யிந்திய முதலவாய் மேவு பாதிகளை மோதி யோர்மொழியில் வேற றும்படி யுதவினான் ஆத லாலிவனு மோகை யாலருளு மாட வம்புலி வருகவே யாசி லாதசிவ ஞான தேவனுட னாட வம்புலி வருகவே
|
(7) |
| |
|
| |
6. தெருள்விலார்-தெளிவில்லாதவர்கள். தெருள்விக்கவோ-தெளிவடையச்செய்யவோ. மழுக்குறு-மழுங்குதலடையச் செய்கிற. அறியகிலம்- அறியவில்லை. 7. ஏதிலார்கள்-யாதுந் தொடர்பில்லாதவர்கள். தீ கொள் பஞ்சு-தீயினாற் பற்றப்பட்ட பஞ்சு. ஓகை-உவகை.
|
|
|
|