| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
வெயிலி லங்கிழை மாத ராடவர் விரக மொன்றுறு மவரெலாம் விரியும் வெண்டிரை வேலை யூடெழ வெளிறும் வெங்கடு வெனவெழா முயலி றந்தசை யாது தானுடன் முறுக வெந்துற வடலையான் முழுகும் வெங்கன லாகு மாலென முனிய வுன்றனை யகலெனா தயர்வு ளந்தரு காம நோய்கன வினும டைந்திட வறிகிலா வமல நெஞ்சின னாத லாலிவன் வருக வென்றன னருவிதாழ் மயிலை யங்கிரி யாளி யோடுற வருக வம்புலி வருகவே மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.
|
(8) |
| |
| |
முடிவ றுஞ்சக சீவ மாபர மெனம யங்குறு மயலெலா முகைநெ கிழ்ந்தளி பாடு மாலையின் முதிர்சி னங்கொளு மரவுபோல் நெடிய வன்றறி காணு மோர்மக னெனவ ழிந்தொரு பிரமமா நிலையி னின்றிடு ஞானி யேவலி னொழுகி நின்றிடு மவர்கடாம் ஒடிவ றும்பர போக மேவின ருணரு மங்கவர் நிலையிலே யுறுவர் பின்பென வேத மோதிடு முறையு ணர்ந்தனை யலைகொலோ மடிவு றுஞ்சிவ யோகி யோடுற வருக வம்புலி வருகவே மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.
|
(9) |
| |
| |
அகல்வி சும்பெழு பாய பேரிருள் பருகு செங்கதிர் வருகெனா னமர ரென்றுயர் தேவர் தானவர் குரவர் தங்களை வருகெனான் முகம லர்ந்துனை யாட நீயிவண் வருக வென்றன னவன்வரு முகிலு றங்குறு வான ளாவிய மயிலை யந்திரு மலையிலே பகையெ னுங்கதிர் காலு மாமணி யரவ முண்டென வெருவனீ பரனொ டொன்றிய நாக மாலிவர் பறவை கண்டுளம் வெருவுமோ மகிழ்வு கொண்டெமை யாளி யோடுற வருக வம்புலி வருகவே மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.
|
(10) |
| |
|
| |
8. வெயில்இலங்கு இழை-ஒளி விளங்குகிற அணிகலன். விரகம்-காம நோய். வெங்கடு-கொடிய நஞ்சு. அமல நெஞ்சினன்-தூய மனமுடையவன். 9. சகசீவம்-உலகுயிர். முகை நெகிழ்ந்துமொட்டு விரிந்து. ஒடிவறும்-கெடுதலில்லாத. 10. பாய பேரிருள்-பரவிய மிருந்த இருள். வருகஎனான்-வருக என்று கூறமாட்டான். அரவம்-பாம்பு வெருவல்-அஞ்சாதே.
|
|
|
|