முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
மெய்ப்படிம மேவியடி மைக்குரிமை யாராய்
       மெய்ச்செயலி லாதவரு நற்றவரெ னாவோர்
பொய்ப்பெயர்கொள் வாரெனினு மெய்ப்பெயர ராயே
       புக்குதவு நீயெமது சிற்றிலென வோர்பேர்
வைப்பவளி யாதிதையு மக்கடலை மீதே
       வைக்குமடி யாலிவண ழித்தலற மாமோ
செப்பரிய வாய்மையிறை சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(8)
ஒற்கவிர வோர்களிலெ னப்புகல்வ தேநீ
       யுற்றொருவர் பாலுமுளை வுற்றுரைசெய் யாதே
நிற்கநனி யீகைவினை பெற்றிடுகை யாலே
       நித்தமது கோறனினி யற்கைநின தார்சீர்
கற்குமடி யேமிரவ கற்றிலெனு மீதுங்
       கைத்தடியி னாலிவண ழித்தறகு மோகாண்
சிற்கனசி வானுபவ சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(9)
மொய்த்தபுழு வாகமுயிர் புத்திமன மாயா
       முற்றுமற வேமறைமு டிக்குமணி யாமா
தத்தொமசி யாகியப தப்பொருளி னாலே
       தக்கசிவ னீயெனவு ணர்த்தியது தானா
வைத்தநின தாள்படுமி துற்றடிமை யாவே
       மைக்கண்மணி யூடுபடு தற்குநிக ராமே
சித்திகள் வழாவொருவ சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(10)

8. படிமம்-வடிவம். நற்றவர்-நல்ல தவத்தையுடையவர். புக்குதவும்-புகுந்து உதவி செய்யும்.9. ஒற்க இரவோர்-வறுமையை உடைய இரவலர்கள். ஈகை வினை-கொடுக்குஞ் செயல். சிற்கன-எல்லாவற்றையும் அறியும் பெருமை பொருந்திய. 10.10. தத்தொமசி-அது நீயாகவிருக்கிறாய் என்னும் மகா வாக்கியப் பொருள். கண்மணி-சிவகண்மணி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்