முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
நரம்புதிர மென்புதோன் மூளைதசை பலகூடி
       நரியுமடி செவியசுருள்வா
னாயுநெட் டலகுவிரி சிறகர்வன் கழுகுமிது
       நமதென்ன வந்தவுடலும்
நிரம்புதுயர் செய்தடங் காதுழன் றொழியாத
       நிரயத் தழுத்துபுலனு
நெறிமருண் டலமந்து திரிகின்ற புன்மனமு
       நில்லா தியங்குமுயிரும்
பரம்புபற் பலவாய குணமுமல னென்றுபோய்ப்
       பாசநிலை குலையநின்ற
படியிலெனை யறிதலே நினையறித லாகவிரு
       பதமுமென் முடியில்வைத்துத்
திரும்புத லிலாதவொரு பதமுதவு கொடையாளி
       சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கியருளே.
(5)
வேறு
அரிமதர் மழைக்கண் வளர்வா ரவிரறன் மருட்டு குழல்வா
       னனிம தி கவற்று நுதல்வே யனவொளிர் மணித்தொ டியதோள்
வரியளி மிடிக்கு மிடியா மதுமடை திறக்கு மலர்வாண்
       மதிமுக மலர்க்கு முதம்வீழ் மணியிதழ் வளைத்த சிலைதாழ்
முரிபுருவ முத்து நகைநேர் முகிழ்முலை வளைக்கை மடவார்
       முதிர்படை யெழுச்சி மதவேண் முரசதிர் முழக்க மறவே
திரிவறு தவத்த ரசநீ சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
(6)

5. மடிசெவி-மடிந்து தொங்குங்காது. நிரம்பு துயர்-மிகுந்த துன்பம். நெறி மருண்டு-வழிதவறி. அலமந்து-சுழன்று. திரும்புதல் இலாத பதம்-வீடுபேறு. 6. அரிமதர் மழைக்கண்-வரி பொருந்திய களிப்பினையுடைய குளிர்ந்த கண்கள். அறல் மருட்டு குழல்-கருமணலையும் மருளச் செய்கிற கூந்தல் வேய்-மூங்கில். முரி-வளைந்த. திரிவு அறு-மாறுபடுதலில்லாத.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்