| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
பழுதிறலை மைக்கு மணியே படுபறை முழக்கு மதுநீ பணியென வெனைத்து நினையேல் பனைபுரை புழைக்கை யுழல்வான் மழைமத மொழுக்கு கவுணால் வளைபிறை மருப்பு வரைமேல் வருமரச னுக்கு நிறையா மதுவுறை பிலிற்று மளிவாய் உழுமல ரயற்கு மலரா ளுயிரெனு மவற்கு மிறையா மொருமுத னடிக்கு வதனா லொருகுறை படைத்த துளதோ செழுமுகில் கவற்று கொடையாய் சிறுபறை முழக்கி யருளே சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
|
(7) |
| |
| |
மறியும்வளி யைச்சு ழுனையாம் வழியுற வியக்கி மணியாழ் வளரிசை மடுக்க நினைவார் மனவிழைவி னெட்டு மடியாய் எறியுநின் மலர்க்கை யதனா லெழுபறை முழக்க மடியே மிருசெவி மடுக்க விழைவே மிகல்கரி முறிக்க வளையா முறியுமலர் மொய்த்த விணர்வீ முரலளி மறித்து மருளான் முறியிடை மறத்தி யர்கடாழ் முடிசெருகு கொத்தி னிடையே செறியுமயி லைக்கி ரியுளாய் சிறுபறை முழக்கி யருளே சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
|
(8) |
| |
|
| |
7. பனைபுரை புழைக்கை-பனைமரம் போன்ற துனையுடைய தும்பிக்கை. பிலிற்றும்-வெளிப்படுத்தும். எனைத்தும்-சிறிதும். உறை-துளி. 8. வளி-காற்று. மடுக்க-நுகர்ந்து மகிழ-இணர்-பூங்கொத்து. முரல்-ஒலிக்கின்ற. முறியிடை-முறிந்து போகும்படியான இடை.
|
|
|
|