முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
பகழிபுரை மைக்க ணளிவீழ் பனிமலர் முடித்த குழல்வார்
       படுமுகிழ் முலைத்தி ருவொடே பனிமதி நிறக்கொ டியனாள்
புகழ்வரை தவத்தின் வருமோர் புதல்விசெவி யிற்ப ருகுபால்
       புரையுமழ லைச்சொன் மணிவாய் புகலவவள் கட்கி னியனாய்
மகிழ்மக வினுக்க மையுமா மணியணி யுறுப்பு றவுலாய்
       வருமரு மகத்த னிமைபோ யொழியமணி முத்த ருவிதாழ்
திகழுமயி லைக்க ணுறுவாய் சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராய் சிறுவறை முழக்கி யருளே.
(9)
உரைசெயு மெவற்று மெனைநேர் வுறநகர் கனத்த திலையா
       லெனவுல கமிழ்த்து கடைநா ளொலிகடன் மிதக்கு நகர்வாழ்
அருள்வடிவ வொப்பி லுமையா ளணிமுலை கறக்கு மருளா
       ரமுதமுண மிக்க விழைவா லழுதகுழ விக்கு நிகராய்
வருநக ரனைத்தும் வனையா மழையிய முழக்கி யெதிர்வார்
       வரவர விருப்ப முறுமூர் தொறுமலி தவத்த ருடனே
திருவடி வருத்தி வருவாய் சிறுபறை முழக்கி யருளே
       சிவமுனிவ கச்சி நகராயய் சிறுபறை முழக்கி யருளே.
(10)

9. பகழிபுரை-கணையை ஒத்த. மைக்கண்-மை தீட்டப்பெற்ற கண். 10. மிதக்கும் நகர்-சீகாழி. அமுத குழவி-திருஞான சம்பந்தர். மழை இயம்-மழையைப்போல் முழங்கும் ஒலிக்கருவி. எதிர்வார்-எதிர்கொள்வார். வருத்தி-வருந்துமாறு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்