| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
போரொன்று வஞ்சமன வெஞ்சொற் கொடுந்தகுவர் புரமொன் றிரண்டுமொருதன் பொருவென்ற வஞ்செழுத் தோதுமவர் வினைநிலைமை போல்வதற் கேகுமருளால் வாரொன்று குங்குமக் கொங்கையந் திருமாது மனையடைத் துந்திறந்தும் வந்துலா வருமிரண் டாழியும் பொய்யாத வாய்மைநன் னெறியந்தணர் நேரொன்று நெஞ்சவஞ் சாலைதனி லகலாது நிற்குமா வீரிரண்டு நிரையிதழ்த் தாமரைத் தவிசினுறை யொருபாகு நிகழ்வுற்று மேவுறுபெருந் தேரொன்று கொண்டவிறை யுளமகிழ வெம்மைய சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(4) |
| |
| |
குன்றலரு மருளாள னென்றமொழி நிற்குறிக் கொண்டுசெல் கின்றதெனவுங் குறித்தொருவர் பாலென்ற வளவிலம் மொழிசென்று கோவமுதி னேர்தலெனவும் நன்றினிய பழமென்ற வளவினெட் டிலைவாழை நற்கனியி னெய்தலெனவு நாடாரும் பிள்ளையென் கின்றமொழி யாண்மகவி னண்ணுமா றெனவுமீசன் என்றளவின் விடமெழுந் திடநடு நடுங்கிநிலை யின்றியிரி தருதேவரை யெய்தாமன் மணிகண் டனைப்பொருந் துதலெனவு மிவணகர மென்பதுதனைச் சென்றடையு மொருபெருங் கச்சிநக ராளிநீ சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(5) |
| |
|
| |
4. போர் ஒன்று-போர் செய்யுந் தன்மை பொருந்திய. கொடுந்தகுவர்-கொடிய அசுரர். 5. அருளாளன்-திருவருட் பெருக்கையுடையவன். நின்குறிக் கொண்டு செல்கின்றது-நினக்கே பொருந்துவதெனக் குறித்துக் கொண்டு நிற்கின்றதுஇரிதரு-அஞ்சியோடுகிற. மணிகண்டன்-நீலமணிபோன்ற கரிய கழுத்தையுடையவன்.
|
|
|
|