| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| |
[கலம்பகத்தின் இலக்கணம் முன்பு உரைக்கப்பட்டது. இக்கலம்பகம் சொன்னயம் பொருணயம் முதலிய பலவகையான நயங்களையுந் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகின்றது.] |
|
|
| |
காப்பு
நேரிசைவெண்பா |
| |
| |
சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்மேல் பத்திதரும் பல்வகைய பாட்டுதவும் - அத்தி அலங்கலா வானை யடுத்தபிடி யீன்ற விலங்கலா வானை விரைந்து.
|
|
| |
| மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா |
| |
| |
நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கையிலைக் கிரியாகப் பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக் காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப் பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக ஞாலத்த களிறனைத்து நகைமணிப்பாம் பிறையாக ஆலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய் !
இது ஆறடித்தரவு |
|
| |
| |
பழியிலா வறங்கள்பல பயின்றாலு முன்றிருவாய் மொழியினா லன்றிவான் முத்திநிலை கிடையாதே விழியினா லலதுலகின் மேவுமுருப் பிறிதுபொறி வழியினா லெதிர்காணு மனிதர்தா முளர்கொலோ.
இவை மூன்றும் நான்கடித்தாழிசை |
|
| |
| |
தத்துவமாந் திரையெழுந்த தனிமாயைப் பெருங்கடலுன் மெய்த்ததாட் புணையன்றி வேறொன்றாற் கடப்பரிதே மைத்திரைவார் கடலியன்ற மரக்கலங்கொண் டன்றுபோய் இத்தரைவாழ் மனிதர்கடந் தேறுவதற் கொன்றுண்டோ.
|
|
| |
| |
தன்னிலையு மெதிர்காட்டாத் தமமாகு மாணவநோய் நின்னையல தெஞ்ஞான்று நீங்குவது தானன்றே துன்னிருள்வாய் முழங்குதிரைச் சுருட்டுகடன் முகட்டெழுந்த மன்னுகதி ராலன்றி மற்றொன்றான் மாயுமோ.
|
|
| |
|
| |
(காப்பு) அத்தி அலங்கல்-ஆத்திமாலை. விலங்கு அலா ஆனை-விலங்கு அல்லாத ஆனைமுகக் கடவுள். 1. பண்ணவர்கோன்பகடு-இந்திரனுடைய வெள்ளை யானை. ஆலத்த-நஞ்சையுடைய. பணி-பாம்பு. பயின்றாலும்-வழக்கமாகச் செய்தாலும். பிறிதுபொறி-வேறு வழி. மெய்த்த-மெய்ம்மைத் தன்மை பொருந்திய. புணை-மரக்கலம். தமம்-கீழ்ப்பட்டது. முகடு-உச்சி.
|
|
|
|