முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கொடுமிடி கெடவரு கொடைபடு நடையினை
சடையொடு நதிபணி தவழ்மதி யொருவினை.
 
மறையறை முறையற மறமற வருளினை
பொறிநெறி மறுகுறு புலனிலை யலகிலை.
 
அரிகரி பகையிகு மணிமணி மயிலையை
வரியரி மதர்விழி மலைமக ணகரினை.

இவை மூன்றும் ஈரடியராகம்
 
முன்னாளி லொருஞான முளையயின்ற வாரமுதம்
எந்நாளு முண்கின்றா யாரேநின் னளவறிவார்.
 
நவத்தமிழ்வே தம்புகலு நன்மொழியிங் குண்மைபெறத்
தவத்தொடுதா னஞ்செயுமோர் தன்மையுனக் கலதுண்டோ.
 
வசைகெ டுத்தனை, இசைகொ டுத்தனை,
செயலொ ழித்தனை, மயல ழித்தனை,
யறம்வி ரித்தனை, மறமி ரித்தனை,
விழைவ றுத்தனை, பிழைபொ றுத்தனை.

இவையெட்டும் இருசீரோரடியம்போதரங்கம்
எனவாங்கு இதுதனிச்சொல்
 
இருப்பம்பு பட்டுருவ வெய்தாலுந் தளராமல்
கருப்பம்பு படாவண்ணங் காப்பவர்க்குத் துணைநீயே.
 
கருமேனி யொழிந்தடியேங் கதிகாண நீயருளால்
திருமேனி கொண்டிருந்து செய்ந்நன்றி மறப்பேமோ.
 
தவப்பிணிக்கு மூலமலந் தான்மூல மாய்க்கிளைக்கும்
பவப்பிணிக்கு மருந்துனது பார்வையே தானன்றோ.

இவையாறும் ஈரடித்தாழிசை
 
வாத மாற்று நீ, போத மாற்று நீ,
வாய்மை யாக்கு நீ, தீமை போக்கு நீ.

இவை நான்கும் முச்சீரோரடியம்போதரங்கம்
 
மெய்யிலே பொய்தோன்றி மெய்யாக மயக்குறுமப்
பொய்யிலே பொய்தோன்றப் புகலுமுனைப் புகல்வார்யார்.
 

மிடி-வறுமை. நதி, பணி தவழ்மதி ஒருவினை-ஆறு, பாம்பு, திங்கள்கள் ஆகியவைகளை நீக்கிவிட்டாய். பொறிநெறி-புலன் வழி. மறுகுறு-வருத்தத்தையடையும், அரிகரி பகையிகு-சிங்கமும் யானையும் பகை நீங்கியிருக்கும். மதர் விழி-களிப்புப் பொருந்திய கண்கள். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால். வசை-பழிப்பு. மறம் இரித்தனை-தீமையைப் போக்கினாய். விழைவு-விருப்பம். இருப்பு அம்பு-இரும்பினாலாகிய கணை. கருப்ப அம்பு-கருப்பமாகிய வருதத்தைச் செய்யும் அம்பு. கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். கருமேனி-கருப்பத்திலேவரும் உடல். ஞானமுளை-திருஞானசம்பந்தர். அயின்ற-உண்ட. ஆரமுதம்-ஞானப்பால்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்