22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
வலந்திரி கதிர்கா ணுலகின ரெல்லாம் வந்துகேட் பனவிலை யெனாத நலந்தரு மொருநீ தமியனேன் கேட்ப நானல திலையெனத் திருவாய் மலர்ந்துரை செய்த தென்கொலோ வறியேன் மயிலைமால் வரைமணி விளக்கே புலந்தெறு வீரர் பெருமவென் றிறைஞ்சிப் புகழ்சிவ ஞானதே சிகனே.
|
(5) |
|
கலிவிருத்தம் |
|
|
சிகரியி னெழுதின மணியின் றேர்ப்பரிக் கிகலிர வுளதுகொ லிருவி னைத்தொடர் நிகரறு நினையடை நிலையி னோர்க்கிலை நகரியி னமர்சிவ ஞான தேவனே.
|
(6) |
|
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு மற்றை யோரும் மேவரு நிலைய ராக வினையினேற் கருள்பு ரிந்தான் மூவரு மிறைஞ்சு ஞான முதல்வனெண் மயிலை மேவி யாவரும் விழையும் வான மிலான்புலம் பொழியு மாறே.
|
(7) |
|
|
|
5. வலந்திரி கதிர்-வலமாகச் சுற்று தலைச் செய்யுங் கதிரவன். நானலது இலை-என்னையல்லாது பிறிதொன்றுமில்லை யென்று மெய்யறிவைப் போதித்தவாறு; இதனால் ஆசிரியர் தாம் மெய்யறிவு பெற்றமையைப் புலப்படுத்தினார். புலம்தெறு-ஐம்புலன்களை வென்ற. 6. இருவினைத் தொடர்-பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய நல்வினை தீவினையாகியவைகளின் தொடர்ச்சிகள். நிகர் அறு-மெய்யறிவினால் இணையற்ற. 7. மேவரு நிலையராக-அடையமுடியாத தன்மையை உடையவர்களாக. விழையும்-விரும்பும்.
|
|
|
|