முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
மேற்படிவேறு
மாறு செயுமைம் புலக்கணமே குணமே மயக்கு மாயையே
வேறு செயுமா ணவமலமே வினையே நுந்தம் விறல்காட்டித்
தேறு செயுநஞ் சிவஞான தேவ னெதிர்நான் செல்வதன்முன்
கூறு செயுநீர் செய்பவெலா மென்பாற் செய்து கொள்ளீரே.
(8)
மேற்படி வேறு
கொள்ளும் வன்பவப் பிணியின ராகிய குவலயத் தவரெல்லாம்
எள்ளும் வெந்துயர்ப் பவப்பிணி மருத்துவ னெனப்படு சிவஞான
வள்ளல் வந்துவண் மயிலைமேல் வாழ்தலை மணிவிளக் கெனக்கண்டு
முள்ள நைந்துசென் றுரைக்கில ரென்கொலோ வுண்டுடுத் துழல்வாரே.
(9)
மறம், பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வாரா யரசன் றூதனென வந்த வொருவ யாமகந்தை
       மலையை யுடைக்குஞ் சிவஞான வள்ளன் மயிலைக் குறவர்காண்
ஏரா ரெங்கள் குலமகளை யின்று கேட்ப நினைவிடுத்த
       விறைவன் றிருக்கா ளத்தியிடை யெங்கண் மிச்சின் மிசைந்தவனால்
சீரா ரெயிறு தரளமெனச் சிதற வடிபட் டுழல்கின்றோன்
       சிறிய குலத்திற் பிறந்தவனோ செந்தாண் மலராற் றேய்ப்புண்டு
பாரா ரறிய வுடல்குன்றிப் பகற்போ தெல்லாம் புறப்பட்டான்
       பழைய குடியிற் பிறந்தவனோ பகரா யுள்ளம் வெருவேலே.
(10)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வேலுடையா னொடுமயிலை மலைமேவு சிவஞானி
       வினைக டீர்க்குங்
காலுடையான் புகழோடு வெள்ளிமலை நிறைநிற்பக்
       கனம்போ தாமல்
பாலுடையான் மிசைவைக்கப் பட்டததன் மேல்வைத்தோன்
       பால்வெண் ணீற்றுத்
தோலுடையா னவன்மீது வைத்ததன்றோ விளமதியஞ்
       சொல்லுங் காலே.
(11)

8. குணமே மயக்கு மாயையே-நற்குணங்களை மயங்கச் செய்கிற மாயையே. கூறு செயும்-எல்லாவற்றையுங் குறைத்தழிக்கும். 9. பவப்பிணியினர்-பிறவி நோயை உடையவர்கள் எள்ளும்-இகழும். உள்ளம் நைந்து-மனம் இளகி. 10. மிச்சில் மிசைந்தவன்-எச்சியை உண்டவன். எயிறு-பல். தரளம்-முத்து. வெருவேல்-அஞ்சாதே. 11. வேலுடையானொடு-முருகக் கடவுளோடு. கனம் போதாமல்-புகழோடு சரியாக நிற்பதற்குப் பாரம் சரியில்லாமல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்