| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| கலிநிலைத்துறை |
| |
| |
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில் ஆலம் போல்வெங் காலனு மந்தோ வணுகுற்றான் சீலங் கேண்மி னொய்யென வேநஞ் சிவஞானி கோலங் காணுங் கொள்கை கருத்திற் குறியீரே.
|
(12) |
| |
| கலிவிருத்தம் |
| |
| |
குறியுமிலை வடிவுமிலை குணமுமிலை யுரையாடவோர் பொறியுமிலை மனமுமிலை புலனுமிலை யரிதாகநீ செறியும்வகை யருள்செய்பொருள் சிவசமய குலதீபமாய் மறியுமளி மலர்முரலு மயிலைவரு சிவஞானியே.
|
(13) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
ஞானிபெய ரேதேனு நன்மைதரு மென்னவுஞ்செம் மேனிபுகல் வேதம் விதித்தபெய - ரான சிவஞானி நாமஞ் சிவஞானி யென்னான் அவஞானி யென்ப வவன்.
|
(14) |
| |
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
அவனோ விவனென் றெனையாளு மண்ண லடியவர்தம் பவநோ யகற்றுஞ் சிவஞான தேசிகன் பாரில்வருஞ் சிவனோ விவனென் றுலகமெ லாந்தொழுந் தெய்வமன்றி எவனோ தமிய னிதயா லயத்தி லிருப்பவனே.
|
(15) |
| |
| கலிவிருத்தம் |
| |
| |
இருந்து மேனியோ டிம்மை மறுமையில் பொருந்து போகம் புரிசிவ ஞானிநீ விரும்பு வார்கட் கெனக்கருண் மெய்விழைந் தருந்து மாசை யிலாமையி லாசையே.
|
(16) |
| |
| மடக்கு, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
ஆசை தனதாண் மூட்டினா னடித்திட் டமுத மூட்டினான் பாச விருளை யகற்றினான் பதிசே ரறிவை யகற்றினான் தேசு மலியு மாகத்தன் சிவஞா னிப்பேர் மாகத்தன் நேச மருவி மறியாரே நிரயத் துயர மறியாரே.
|
(17) |
| |
|
| |
12. காலம் போயிற்று-வாணாள் முடிந்தது. அஞ்சனம் அன்ன கடா-எருமைக் கடா. ஆலம்-நஞ்சு. ஒய்யென-விரைவாக. கோலம்-திருவடிவம். 13. செறியும் வகை-பொருந்துமாறு. மறியும் அளி-சுற்றித் திரியும் வண்டுகள். மலர் முரலும்-மலரில் ஒலிக்கும். 14. சிவஞானி-சிவபிரானது மெய்மைத் தன்மையை உணர்ந்தவன். அவஞானி-எதற்கும் பயன்படாத வீணான அறிவையுடையவன். 15. பாரில் வரும்-உலகில் மனித வடிவு கொண்டு வந்த. எவனோ-வேறு யாவனோ? 16.பொருந்து போகம்-அமைந்துள்ள பயன்கள். மெய்விழைந்து-உண்மைப் பொருளை விரும்பி. 17. அகற்றினான்-நீங்கச் செய்தான். அகற்றினான்-விரி வடையச் செய்தான். தேசு-ஒளி. ஆகத்தன்-உடலையுடையவன். மாகத்தன்-சிறந்த தலைவன். நிரயத்துயரம்-நரகத்துன்பம்.
|
|
|
|