முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கட்டளைக்கலித்துறை
படிக்குப் பெருஞ்செல்வ மாஞ்சிவ ஞானிமெய்ப் பத்தர்மணி
முடிக்குப் பெருஞ்செல்வ மாம்பதத் தானொடு முன்னியெங்கள்
மிடிக்குப் பெருஞ்செல்வ மென்றில ரேதரை வேந்தரொடெங்
குடிக்குப் பெருஞ்செல்வ மென்றுசென் றோதுறுங் கோளர்களே.
(21)
கலிவிருத்தம்
கோள்வலி செய்வதென் கொடிய வாகிய
நாள்வலி செய்வதெ னம்மைக் கூற்றெனும்
ஆள்வலி செய்வதெ னமுது பானிதன்
தாள்வலி யவைகொலுந் தண்டு தொண்டரே.
(22)
அம்மானை, மடக்கு, கலித்தாழிசை
தொண்டர்நெஞ்ச வஞ்சந் தொலைக்குஞ் சிவஞானி
அண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணல்கா ணம்மானை
அண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணலே யாமாகில்
கண்டநஞ்சங் கண்டிலநங் கண்ணினா லம்மானை
காணோ மயிலைவரைக் கண்டக்கா லம்மானை.
(23)
கலிவிருத்தம்
அம்மா சிவஞா னியடிக் கமலம்
மும்மா யைகடந் துமுயங் குமது
சும்மா தலைமீ துசுமத் தினனால்
கைம்மா றுளதோ கடையே னிடையே.
(24)

21. படிக்கு-உலகத்துக்கு. மிடிக்கு-வறுமைக்கு. தரைவேந்தர்-உலக மன்னர்கள். கோளர்கள்-இழிந்தகுணமுடையவர்கள். 22. கோள்-ஒன்பான் வகைக் கோள்கள். வலி-துன்பம். தாள் வலி-திருவடியின் ஆற்றல். 23. அண்டர்-தேவர்கள். கண்ட நஞ்சம்-கழுத்திலுள்ள நஞ்சுக் கறை. 24. மும்மாயை-ஆணவம், மாயை, காமியம். சுமத்தினன்-வைத்தருளினான்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்