| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| கலிவிருத்தம் |
| |
| |
உற்பவ நிற்ப தொடுக்க மளிக்கும் சிற்பரன் மெய்ச்சிவ ஞானி திருக்கை நற்பிர சாத மலர்ப்பத நம்பால் சொற்பெறு மூவர் தொழிற்புண ராவே.
|
(29) |
| |
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
வேதந் தெளிந்தநின் செவ்வாய் மொழிநின் விரைமலர்ப்பூம் பாதம் படுதுக ளெங்குல தேவதை பார்வையெங்கள் சாதங் களையு மருந்துநின் னாமந் தனிக்குடிலை நாதன் கயிலை சிவஞானி நீயமர் நல்லிடமே.
|
(30) |
| |
| அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
நல்ல புலவர் பழிச்சுசிவ ஞானி யெனமோர் நாமமுறும் மல்லன் மயிலை மலையனைவே றொருவ னாக மதிக்கிலேன் மெல்ல வொருபூ வீசு தன்முன் வேளை யெரித்த தான்வெகுளி இல்ல னெனினும் பொறையுளன்போற் றோன்றா னெனினும் யான்றானே.
|
(31) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
யானென தென்னு மிவைகழன்று வந்துசிவ ஞான குருவை நணுகிலா - மானுடர்தம் பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத் தெல்லாக் கடவுளரு மின்று.
|
(32) |
| |
|
| |
29. உற்பவம்-தோற்றம். ஒடுக்கம்-மறைவு. சொற்பெறு-புகழ்ச் சொல்லைப் பெறுகிற. 30. வேதம் தெளிந்த-மறைப் பொருள்களைத் தெளிவாக உணர்ந்த. துகள்-தூள். சாதங்களையும்-பிறப்புக்களைப் போக்கும். 31. பழிச்சு-போற்றுகிற. மல்லல்-வளப்பம் பொருந்திய. ஒரு பூ வீசுதல் முன்-ஒரு மலர்க்கணையைச் செலுத்துவதற்கு முன். 32. கழன்று-நீங்கி. நணுகிலா-நண்ணாத.
|
|
|
|