| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| வண்டுவிடுதூது, இன்னிசைக்கொச்சகக்கலிப்பா |
| |
| |
இன்றுபிழை யொன்று மியற்றா வெனைமுனிந்து நின்று சிறிதுமரு ணெஞ்சுறா வின்மதனைக் கொன்றுவிடி லில்லைக் கொலைப்பாவ மென்றளிதாள் சென்றுபுக லீர்நஞ் சிவஞான தேசிகர்க்கே.
|
(33) |
| |
| கலிவிருத்தம் |
| |
| |
கேடு தீர்மயி லைக்கிரி ஞானியைத் தேடு வார்சிலர் செய்யுங் கருமியை நாடு வார்பலர் நன்மணி யோகடைக் கோடு வீழ்மணி யோபலர் கொள்வதே.
|
(34) |
| |
| சித்து, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
கொள்ளிபோன் மணித்தலைநா கங்கிடக்கு மயிலைமலைக் குகையில் வாழுந் தெள்ளுவா னமுதனைய சிவஞானி பதம்பரவுஞ் சித்தர் நாங்காண் அள்ளியோர் பிடிசோறு தரிற்பத்தா நாமுனக்கிங் கைய மின்றி வெள்ளிதான் வருவதன்முன் பொன்னாக்கு வோமிதுநம் வித்தை தானே.
|
(35) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
வித்தை சிவஞானி வித்தையே காண்பவெலாம் மித்தையென நின்று விளம்பியே - சத்தியமாய் நாட்டினா னீ தானு நானே யெனப்புகன்று காட்டினான் றன்னையே காண்.
|
(36) |
| |
|
| |
33. முனிந்து நின்று-சினந்து. அளிகாள்-வண்டுகளே! 34. கேடுதீர்-தீமையில்லாத. 35. தெள்ளுவான் அமுதனைய-தெளிந்த அமுதத்தைப் போன்ற. அள்ளி ஒரு பிடி சோறு தந்தால், அதற்குமாறாகப் பத்து மடங்கு பயன் சேர வெள்ளியைக் காண்பதன் முன் பொன்னாமாறு செய்து தருவோம், என்பது பின்னிரண்டடிகளின் பொருள். வெள்ளி-வெள்ளிக்கிழமை; பொன்-வியாழக்கிழமை. 36. மிந்தை-பொய்
|
|
|
|