| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
தடங்கட னீர்முகந் தாங்குப் பொழியினுந் தண்விசும்பு நெடுங்கட னீர்மை பெறல்போல வேதங்க ணீறுதொட்டு நடுங்கிடு மாறில் சிவஞான தேசிக னல்கினுமோர் படங்கிடை ஞால முடையார் பெறுகுவர் பாக்கியமே.
|
(51) |
| |
| எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
பாக்கியமும் பாலுமுமை புகட்டியமெய்ஞ் ஞானப் பாலனீ யளவிறந்த சிவபெருமா னடியார்க் காக்கியிடல் கருதியே யுருத்திரபல் கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ வெனத்தன் தூக்கினிடை யுரைசெய்தா னென்றேயென் றனக்குத் தோன்றுகின்ற துலகில்வே றொருவரிலா மையினால் சீர்க்கவிஞர் புகழ்மயிலை மால்வரையின் விளக்கே சிவஞான தேவனெனச் சிறந்தவருட் கடலே.
|
(52) |
| |
| நேரிசைவெண்பா |
| |
| |
கடலுலக மேத்துங் கருணைமலை மாயை நடலை தபுமயிலை ஞானி-விடலரிய நல்லினத்தை நண்ணா நணுகுமுட லாமுதலூர் மெல்லினத்து ளாதிநிலை மெய்.
|
(53) |
| |
| களி. எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
மெய்த்தவறு சமயங்கட் கிறைவ னாகி விளங்குசிவ ஞானகுரு வாம மென்னுஞ் சத்திசம யத்தினுக்குக் கள்ளு மூனுந் தகுமெனமான் மதுகைவிடானாகி நின்றான் புத்தலரி யயன்கரகங் கொண்டு வந்தான் புராரியுழை யைங்கரன்பே ரெலிகைக் கொண்டான் நெய்த்தவடி வேன்முருகன் சேவல் கொண்டா னிலவினனோர் முயன்முழுதும் விழுங்கி னானே.
|
(54) |
| |
|
| |
51. தடங்கடல்-பெரிய கடல். 52. மெய்ஞ்ஞானப்பாலன்-திருஞானசம்பந்தர். அட்டிட்டல்-சமைத்து உணவளித்தல். தூக்கு-திருமயிலைத் தேவாரப்பாடல். 53. மாயை நடலை-மாயையின் பொய்ம்மைத் தன்மை. தபு-கெடுக்கும். 54. மெய்த்த-உண்மையாகிய. புராரி-சிவன். உழை-மான். நிலவினன்-திங்கள்.
|
|
|
|