முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
தழை.கலிநிலைத்துறை
விழுங்குவள் போலது கொண்டற லோதியின் மேல்வைத்தாள்
அழுந்துற வாள்விழி யொத்தின டேமொழி யன்பாநின்
செழுந்தழை பட்டது நஞ்சிவ ஞானி திருத்தாள்கள்
பழம்படு நெஞ்கடை யார்கரம் வந்து படும்பாடே.
(55)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பாடு வாரிசை யறியு மியாவுமூர் பணியு நல்லிய லம்ப லத்துநின்
றாடு வாரறி வார்கொ லோவறி யார்கொ லோவெனப் பாடு வார்கொளத்
தோடு வார்செவி நல்கி னானுயர் சூலி நஞ்சிவ ஞானி நீபடை
வீடு வார்செவி யாக நல்கினை விலகி நல்லியற் புலவர் கொள்ளவே.
(56)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
கொள்ளு முண்டி பகுத்துண்டு பெருஞ்சீர் கொண்டா னின்குரவன்
கள்ளும் வண்டு மறாமலர்ப்பூம் புலியூர்ப் பச்சைக் கந்தமுனி
தெள்ளு மிருஞ்சீர் நீபகுத்திட் டுண்ணா துற்றாய் சிவஞானி
துள்ளு மருந்தா யினுங்கன்று சொல்லா ரோசொ னல்லாரே.
(57)
கட்டளைக்கலித்துறை
நல்லா ரவன்சொல்வ தெல்லாம்பொய் யென்பவர் நன்மையிலாப்
பொல்லா ரவனைமெய் யாளனென் பார்மெய்ப் பொருளுணர்ந்த
வல்லார் மயிலைச் சிவஞானி யைச்சொல வாய்திறவார்
கல்லா ரவனியல் சொல்வமென் றேபல கற்றவரே.
(58)

55. அறலோதி-கருமணல் போன்ற கூந்தல். வாள்விழி ஒத்தினள்-வாளைப்போன்ற கண்களிலே ஒற்றிக்கொண்டாள். 56. நல்இயல்-நல்ல தன்மையுடைய. சூலி-சூலப்படையை உடையவன். 57. உண்டி-உணவு. கள்-தேன். பகுத்திட்டு-பங்கு செய்து. 58. அவன் இயல்-அவனுடைய இயல்பை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்