| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
| |
| |
மேவரு மெய்ச்சிவ ஞானி திருப்புகழ் மேன்மை யிசைத்திடுநாள் மாவுர கர்க்கிறை தானொளிர் பைத்தலை மரண வசைக்குமதால் பூவசை வுற்றிடு மாலென மட்டவிழ் பூமிசை யுற்றிடுவான் பாவின் வியப்புறு மேரு முதற்கிரி பார மியற்றினனே.
|
(64) |
| |
| நேரிசை வெண்பா |
| |
| |
பாரார் விசும்புளார் பாதாளத் தார்பரவுஞ் சீரார் சிவஞான தேசிகா - தீரா அறவா நினைக்கி னடியேன் பொருட்டுப் பிறவா நினக்குப் பிறப்பு.
|
(65) |
| |
| அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
பிறந்தான் மேலு மிடிதீர்நோய் தீரென் றெமைப்பின் றொடர்வனென அறிந்தாய் போலுஞ் செம்பவளத் திருவாய் மலர்ந்தென் னகந்திருத்தி இறந்தார் ஞால மிசைப்பிறவா முதுகுன் றகலா தெனைவைத்தாய் சிறந்தார் வாய்மைச் சிவஞானிப் பேரோய் தீராச் சீரோயே.
|
(66) |
| |
| நேரிசையாசிரியப்பா |
| |
| |
சீர்வளர் குவவுத் திண்டோண் மாருதி உயிர்தரு மருந்தொன் றுறுதற் பொருட்டு முழுமணி கொழிக்கு முகங்கவி ழருவிக் குன்றமொன் றெடுத்த கொள்கை போலச் 5. சொற்றிறம் விரித்த சுடர்மணிச் செழுஞ்சூட் டுரக வேந்த னொருதலை தரிப்பக் காதல் கூர்ந்து கண்ணகன் ஞாலம் உச்சிக் கொண்ட கச்சிப் பதியும் எறும்பியுயிர் நீங்கி லெறும்பி யீருரி 10. போர்த்துப் போகும் புராதன மலையும் ஆன்பாற் கன்றி யளவில்பல் கறிக்கும் இன்சுவை விளையு மென்சே யூருங் கயிலைபோற் சிறந்த மயிலைமால் வரையும் இடங்கொண் டிருந்த வெங்க ணாயகன் 15. அரன்றிருத் தொண்டர்க் கன்னை போல்வான் புகழுநர்க் கடங்காப் புகழுடைப் பெருந்தகை உலகா யதனுக் கிலகா யுதமாய் அணுமத மோரணு வாகத் துரந்து விசேட மதத்தின் விசேட நீக்கிக் 20. காலவா திக்கோர் கால னாகிக் குருமத நொய்தெனக் கூறி மாற்றிப் பஞ்ச ராத்திரிக் கஞ்சு பகலாய்ச் சைவப் பயிர்க்குத் தண்முகி லானோன் நாந்தொழ வருள்சிவ ஞான தேவன் 25. சமய வாதிக டம்மத நிறுவத் தகர்போல் வாதிற் றாக்குத னோக்கிச் சிரித்துளங் களிக்குஞ் சிவாநு பூதியின் மாண்டிட வெம்மை வைத்தனன் 26. வேண்டிய செய்கவவ் வீணர் தாமே.
|
(67) |
| |
|
| |
64. திருப்புகழ்-சீர்த்தி. உரகர்க்கிறை-ஆதி சேடன். பைத்தலை-படத்தையுடைய தலை. மாண-மிகவும். பூ-நிலம். பூமிசையுற்றிடுவான்-நான்முகன். 65. பாரார்-உலகத்தவர். விசும் புளார்-விண்ணுலகத்தவர். 66. மிடிதீர்-வறுமையைப் போக்கு. முதுகுன்று-பழமலை. 67. குவவு-திரண்ட. மாருதி-அநுமான். எறும்பி-யானை. அரன்-சிவன்.
|
|
|
|