முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
பிச்சியார். கலிநிலைத்துறை
தாமே மனிதர் தமதா மயிலைத் தனிஞானி
பூமேன் மனிதக் கோல மடைந்து புறப்பட்டான்
மாமேன் மையரா கியமா தவர்தவம் வௌவற்குக்
கோமே தகமே நீதவ வேடங் கொண்டாயே.
(68)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
கொண்டசிலை மரமுதலா யினதமைத்தாஞ் சிவமெனவே
       குறிக்க மாட்டார்
அண்டர்முத லாயினோர் பாவிக்கப் படுமயிலை
       யமர்ந்திட் டெம்மைத்
தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே சிவோகமெனத்
       துணிந்து கொண்டு
பண்டைநரர் பவமுழுதுந் தொலைத்திடுவ னியாரதிகம்
       பார்த்தி டீரே.
(69)

68. பூமேல்-உலகத்தில். மாமேன்மை-சிறந்த பெருமை. வௌவல்-பற்றுதல். 69. அண்டர்-தேவர். பாவிக்கப்படும்-போற்றப்படும். பண்டைநரர்-நெடுங்காலமாகப் பிறவியையடைந்து வருந்தும் மனிதர்கள். பவம்-பிறப்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்