| 22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம் |
|
| பாண். நேரிசைவெண்பா |
| |
| |
பார்த்திடுவ னீலகண்ட பாணனா ராகநினைத் தீர்த்தன் சிவஞான தேசிகன்சீர் - ஏத்திவரில் பாணா நினைச்சாதி பாராட்டு வேன்பிறர்சீர் நாணா துரைத்துறலா னான்.
|
(70) |
| |
| கட்டளைக்கலித்துறை |
| |
| |
நானே சசிவன் னனிற்பெரி யேனவன் ஞானிதனைத் தானே யடைந்தில னான்றிருக் காஞ்சியிற் றண்மலர்ப்பூந் தேனே யனைய சிவஞான தேவனைச் சேர்ந்திமைப்பில் ஊனே யுயிரே யெனுமிவை வேறுபட் டுய்ந்தனனே.
|
(71) |
| |
| நேரிசை வெண்பா |
| |
| |
உன்னைச் சிறையிட் டுளானெஞ் சிவஞானி தன்னைப் பணிவினவித் தான்செய்வன் - என்னைப் படைப்பேன் கிடைப்பேனென் றெண்ணாதே பாழி அடைப்பேன் கமலால யா.
|
(72) |
| |
| எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
| |
| |
ஆலய மெனக்கொண் டெம்மனத் தமர்ந்த வருட்சிவ ஞானதே சிகவெம் பாலைய மலர்க்கண் ணிரண்டுடை யாய்க்குப் பார்வைமூன் றுளனெனப் படுவோன் மேலவ னென்னி லவற்குநா லிருகண் விண்ணவ னுயர்ந்தவ னவற்குச் சாலவு மதிக னாவனா யிரங்கட் டவளமார் கவளவா ரணனே.
|
(73) |
| |
|
| |
70. தீர்த்தன்-மேன்மையை உடையவன். ஏத்திவரில்-போற்றிவந்தால். 71. சசிவன்னன்-விருத்தாசல புராணத்திற் கூறப்படும் ஒருவன். இவன் பல தீமைகளைச் செய்து வெண்ணிற நோயை அடைந்தபடியால் சசிவன்னன் என்று பெயர் பெற்றான். இவனை இவன்தந்தை மானந்திபராயணர் என்னும் பெரியவரிடங்கொண்டு போய்த் தீவினையைப் போக்கி மெய்யறிவுபெறச் செய்தான். 72. சிறையிட்டுளான்-படைக்க முடியாதபடி தடைசெய்துள்ளான். கமலாலயா-நான்முகனே! 73. பார்வை மூன்றுளன்-சிவபிரான். நாலிருகண்விண்ணவன்-நான்முகன். தவளம்-வெண்மை. வாரணன்-தேவேந்திரன்.
|
|
|
|