முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
வஞ்சிவிருத்தம்
இரந்து நிற்றலி லாமையுங்
கரந்து நிற்றல்க லாமையும்
பொருந்து நிற்புகழ் வேனியான்
திருந்து மெய்ச்சிவ ஞானியே.
(78)
நேரிசைவெண்பா
ஞானியஞ் ஞானியெனல் ஞானசம் பந்தனெனுந்
தானிமணப் பந்தர்க்குத் தப்பியுழல் - மானுடர்காள்
நில்லாமல் வம்மினோ நின்றசிவ ஞானிபதம்
எல்லாம் வழங்குகின்றா னின்று.
(79)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
இன்றுவர்வாய் மகளிர்மய லுறாதென்று மெனைத்தடுத்தா
       ளிசையக் கொண்டாய்
வென்றிமலி துறவியா தலினீயம் மாதொருபால்
       விழைந்து வைத்தோன்
முன்றமர்செய் மணம்விலக்கி வலிந்தாட்கொண் டிருமாதர்
       மோக வேலை
யன்றமிழ நம்பியைச்செய் தனன்சிவஞா னிப்பெரும்பே
       ரடைந்து ளோயே.
(80)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அடையாத புல்ல ரினமோ டிணங்க வடியேனை விட்ட வொருநீ
கிடையாத நின்னை யுறமன்பர் தங்கள் கிளையோ டிணங்க வருள்வாய்
திடையாக நாளி னடியான் முனிந்த சிவஞான தேவ மதியைச்
சடையா லணிந்த வவன்வே றியார்கொ றலைவா வெனக்கு மொழியே.
(81)

78. கரந்து நிற்றல்-மறைந்திருத்தல். 79. மணப் பந்தர்க்குத் தப்பி-திருஞானசம்பந்தருடைய திருமண விழாவில் வீடுபேற்றையடைவதற்குத் தவறி. உழல்-பிறப்பிறப்பில் உழலுகின்ற. வம்மின்-வருவீர்களாக. 80. துவர்வாய்-பவழம் போன்ற வாய். வென்றிமலி-வெற்றி மிகுந்த. தமர்-உறவினர். மணம் விலக்கி-சுந்தரர் திருமணத்தைத் தடுத்து. இருமாதர்-பரவையார், சங்கிலியார். மோகவேலை-காமக்கடல். 81. கிடையாத-அடைதற்கரிய.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்