முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
அருளிச்செய்த

இட்டலிங்க வகவல்
நேரிசையாசிரியப்பா
         விரிகட லாடைப் பெருநில மடந்தைக்
         கரும்பெற லாரம் புரைந்தினி தொழுகும்
         பொருதிரைப் பொன்னித் திருவரங் கத்துப்
         புதுவெயி லெறிக்குங் கதிர்மணி சுமந்த
5.        ஆயிரஞ் சுடிகை மாயிரும் பாந்தட்
(1)
         பள்ளி மீமிசை யொள்ளொளி மின்னொடு
         கருமழை கிடந்த காட்சி போலப்
         பிறைநுதற் றிருவோ டறிதுயி லமர்ந்த
         புரிவளைத் தடக்கைப் பெரியோன் றானும்
10.       மலர்தலை யுலகம் பலவும் பயந்து
(2)
         தெய்வத் தாமரைத் திருத்தவி சிருக்கும்
         அசைவில் காட்சித் திசைமுகத் தொருவனும்
         ஈண்டிதன் னடியுஞ் சேண்டொடு முடியுந்
         தனித்தனிக் காண்குது மெனத்தமி லிசையா
15.       இலங்குபிறை மருப்பின் விலங்குரு வெடுத்து
(3)
         நெடுநிலங் கிளையா வுடன்மிகத் தளர்ந்தும்
         நிறைமதி நிறத்துப் பறவையுருப் பரித்து
         வானகம் பறந்து மேனிநொந் திளைத்துங்
         காண்டல் செல்லா தியாண்டுபல கழிய
20.       மண்டழற் பிழம்பாய்ப் பண்டு நின்றோன்
(4)

1. புரைந்து-ஒத்து. பொருதிரை-கரையை மோதுகிற திரை. பொன்னி-காவிரி. 5. சுடிகை-உச்சிக் கொண்டை. மாஇரும்-மிகப்பெரும். பாந்தள்-ஆதிசேடன். 2. கருமழை-கரிய முகில். 8. திரு-திருமகள். அறிதுயில்-எல்லாவற்றையும் உணரத்தக்க மெய்யறிவுத்தூக்கம். 9. வளை-சங்கு. பெரியோன்-திருமால். 10. பயந்து-பெற்று. 3. தவிசு-இருக்கை. திசைமுகத்தொருவன்-நான்முகன். 13. சேண்-மிகவுயர்ந்த விண். 15. விலங்குரு-பன்றி வடிவம். 4. கிளையா-தோண்டி. 17. பறவையுரு-அன்ன வடிவம். பரித்து-தாங்கி. 19. காண்டல் செல்லாது-காண முடியாமல். 20. மண்டு-மிகுதியான.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்