முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         பூசனை விடுத்த மாசுபுரி நெஞ்சத்து
         வீயா வஞ்சத் தீயோ ரிருந்த
         கடிகொண்மூ வெயிலும் பொடிபட நகைத்தோன்
         பொன்னி னியன்றன மென்னறுங் கொன்றையும்
25.       வெள்ளியிற் குயின்றன வெள்ளியொள் ளெருக்கும்
(5)
         ஒழுகொளி மரகதத் தெழில்பெறச் செய்தன
         அறுகும் வில்வச் செறிபசுந் தழையுந்
         தும்பையு மத்தமும் வம்பவி ழாத்தியுங்
         கொழிக்கு மிருந்திரைக் குளிர்புனற் பெருக்கில்
30.       சிறுவெள் ளோதிமந் திரிதர லென்ன
(6)
         வெண்ணில வொழுக்குந் தண்மதிக் கொழுந்து
         திரிதரச் சிறந்த செக்கரஞ் சடையோன்
         மன்றலம் பொதியிற் றென்றலந் திருத்தேர்த்
         திங்களங் கவிகை யைங்கணைக் கிழவனைப்
35.       பற்றிய செந்தீ நெற்றிநாட் டத்தோன்
(7)
         அருடிரண் டெழுந்த வுருவமென் றுணர்த்தி
         இருள்குடி யிருந்த திருவமர் மிடற்றோன்
         ஏனையோர்க் கிறைமை யின்மை காட்டி
         முடங்குளை மடங்கன் முகனடுக் கோத்த
40.       வெண்டலை மாலை கண்டவர் வெருவத்
(8)
         தண்டாது கிடக்குந் திண்டோட் பொருப்பினன்
         அண்டப் பித்திகை விண்டிட வதிர்க்குந்
         தீவாய்ப் பிணையும் பூவாய்க் கணிச்சியும்
         அன்ன முயர்த்தோன் சென்னிக் கடிஞையும்
45.       மணந்தரு தண்டுழாய்ப் பிணந்தலைச் சுமந்த
(9)

5. வீயா-கெடாத.23. கடிகொள்-பாதுகாப்பைக் கொண்ட. மூவெயில்-முப்புரமதில். 24. இயன்றன-அமைந்தாற்போன்ற. 25. குயின்றன-செய்தாற் போன்ற. 6. செய்தன-செய்தாற் போன்ற. 28. வம்பவிழ்-மணம் வெளிப்படும். 30. ஓதிமம்-அன்னம். 7. செக்கர்-செவ்வானம். 34. ஐங்கணைக் கிழவன்-காமன். 35. நாட்டம்-கண். 8. இருள்-கருமை. மிடறு-கண்டம். 38. இறைமை-தலைமைத்தன்மை. 39. மடங்கல்-அரிமா. 40. வெருவ-அஞ்ச. 9. தண்டாது-நீங்காமல். தோட் பொருப்பினன்-தோளாகிய மலையை உடையவன். 42. பித்திகை-சுவர். விண்டிட-பிளக்க. அதிர்க்கும்-ஒலிக்கும். 43. கணிச்சி-மழு. 44. சென்னிக் கடிகை-தலையாகிய பாத்திரம். 45. துழாய்-துளசி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்