முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         முத்தலைச் சூலமும் வைத்தகைத் தலத்தோன்
         வான்றோய் செக்கரிற் றோன்றுபிறை யென்னப்
         பொன்வரைக் குவடு தன்வயிற் றுரிஞ்ச
         மேனிவந் தோங்கிய வெஞ்சினக் கேழலின்
50       கோடுகிடந் திமைக்கும் பீடுகெழு மார்போன்
(10)
         பிறையுகிர் நோன்றாட் பொறியுடற் பேழ்வாய்
         உறுவலிப் புலியி னுரியுடை யுடீஇத்
         துத்திப் பைத்தலைச் சுடர்மணிச் சூட்டுக்
         கடுவொடுங் கெயிற்றுநாண் கட்டிய வரையோன்
55       திருகுவெஞ் சினத்தி னுருகெழு தோற்றத்
(11)
         தெறுழ்வலித் தடந்தோட் டறுகட் கூற்றம்
         ஊழியி லெழுதரு முறுவளி சாய்த்த
         நீனிறக் குன்றம் போன்மெனச் சாய
         ஒருசிறிது நிமிர்ந்த முருகுவிரி கமலத்
60       தலர்நலங் கவற்று மறைகழ லடியோன்
(12)
         வெள்ளி மால்வரை துள்ளிநடந் தன்ன
         கடுநடைச் செங்கண் விடைவல னுயர்த்தோன்
         இமய மீன்ற வமையுறழ் தடந்தோட்
         கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைக் குவிமுலைக்
65       கருங்குழற் பிறைநுதன் முருந்திள முறுவல்
(13)
         திங்கள் வாண்முகப் பொங்கர வல்குல்
         தளிர்புரை மெல்லடி விளரியந் தீஞ்சொல்
         கயல்புரை யரிக்கட் கருணையங் கருங்கடல்
         இனிதுவீற் றிருக்கு மிடமருங் குடையோன்
70       இன்னண மிருப்பினுந் தன்னிலை யெவர்க்கும்
(14)
         இற்றெனக் கிளக்கும் பெற்றிய னல்லோன்
         பெறுதலு மிழத்தலும் பிரிதலும் புணர்தலும்
         ஊணு முறக்கமு மூக்கமு மடிமையும்
         பிணியு மச்சமும் பிறபல குணனுந்
75       தோற்றமும் பருவமுந் தொலைவு மில்லோன்
(15)

10. பொன்வரைக்குவடு-மேருமலை உச்சி. 49. கேழல்-பன்றி. 50. கோடு-கொம்பு. பீடுகெழு-பெருமை பொருந்திய.11. உகிர்-நகம். நோன்றாள்-வலிய தாள். பொறி-புள்ளி. 52. உரியுடை-தோலாடை. உடீஇ-உடுத்து. 53. துத்தி-படப்பொறி. 54. கடு-நஞ்சு. நாண்-அரைக்கச்சு. 55. திருகு-மாறுபட்ட. 12. எறுழ்வலி-மிகுந்த வலி. 57. ஊழி-உலக முடிவுக்காலம். உறுவளி-பெருங்காற்று. 58. நீல் நிறக்குன்றம்-கரிய நிறமுடைய மலை. 59. முருகுவிரி-மணம் வெளிப்படும். 60. கவற்றும்-கவலச் செய்யும். 13. விடை-விடைக்கொடி. 63. அமைஉறழ்-மூங்கிலையொத்த. 65. முருந்திள முறுவல்-மயிலிறகினடி போன்ற இளம்பற்கள். 14. விளரி-விளரிப்பண்ணைப் போன்ற. 68. அரிக்கண்-ரேகை பொருந்திய கண். கருணையங் கருங்கடல்-உமாதேவி. 69. இடமருங்கு-இடப்பக்கம். 70. இன்னணம்-இவ்வாறு. 15. இற்று-இத்தன்மைத்து. கிளக்கும்-கூறும். பெற்றியன்-பெருமையை உடையவன். 73. மடிமை-சோம்பல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்