| 23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
| |
சங்கர னமலன் றாணு சதாசிவன் முழுதொருங் குணர்ந்தோன் முன்னோன் றலைவன் தன்னருட் பெருமைக் குன்னரும் பிறவிக் கழிபெருந் துன்பமுற் றுழிதரு வோரை 80 ஈர்த்தாட் கோட லியற்கை யாகலின்
|
(16) |
| |
| |
உடலெனப் பெயரிய விடலருஞ் சிறைப்பட் டாரஞர் மூன்று மானா தருந்தும் என்னையு மாளத் தன்னுளத் தெண்ணி மனமொழி மெய்களின் மருவரு மொருதான் 85 கருங்கட லுடுத்த விருங்கண்ஞா லத்துக்
|
(17) |
| |
| |
குரவ னெனவோ ருருவொடு வந்து பெரிதுட் கிடந்த வருள்வெளிப் படுத்து நன்னர் நோக்கத் தென்னை நோக்கிய உலகம் விளக்கும் பலகதிர் பரப்பி 90 வாளர வென்னுமோர் தாளினிற் பூத்த
|
(18) |
| |
| |
அங்கண்மா ஞாலப் பங்கய மலர்க்குப் பொன்னிறக் கொட்டையாய்ப் பொலிந்துநின் றுயர்ந்த விண்டொடு குடுமி மேருவலந் திரியும் ஆழியொன் றுடைய வேழ்பரி நெடுந்தேர்ப் 95 பரிதி வானவன் பரவையிற் றோன்றப்
|
(19) |
| |
| |
பாயிரு டொலைத்துப் பகல்பிறந் தென்ன உள்ளிரு டுமித்தாங் கொளிசிறந் தன்றே-அவ்வழி அளியனுந் தற்பெறக் களிமிகுந் தினிதினே தன்னை யெனக்குத் தானீந் தருள்புரிந் 100 தென்னிடத் தொழிவின் றிருந்தனன் மன்னோ
|
(20) |
| |
|
| |
16. ஈர்த்தாட்கோடல்-இழுத்து ஆட்கொள்ளுதல். 17. ஆரஞர்-பொருந்திய துன்பம். ஆனாது-அமையாமல். 84. மருவரும்-பொருந்துதற்கரிய. 18. குரவன்-ஆசான். 19. ஆழி-உருளை. 95. பரவை-கடல். 20. பாயிருள்-பரவிய இருள். 97. துமித்து-கெடுத்து. 98. அளியனும்-எளியேனும். 100. ஒழிவின்று-நீங்காமல்.
|
|
|
|