| 23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
| |
தன்னடைந் தவரை யின்னலம் பிறவிப் பெருந்தளை யகற்றி யரும்பெற லின்பத் தொருதனி வீட்டுல குய்த்த லானுந் துஞ்சினோ ரென்பு தோய்த லானும் 105 ஊன்கெட வுடம்பு நோன்புழந் திமயம்
|
(21) |
| |
| |
ஈன்றகொம் பிடத்துத் தோன்றுத லானும் ஒப்புமை யின்றி யுயர்ந்தமை யானுந் தன்னை மானும் பன்னருஞ் சிறப்பிற் கங்கையென் றுரைக்குங் கடவுளா றுடுத்த 110 பேசரும் பெருமைக் காசியம் பதியும்
|
(22) |
| |
| |
கரைமிசை நின்ற விரிதலைத் தாழையின் பூங்குலை சிதறித் தாங்கரும் பெருங்காய் அழனிறத் தாமரை யலரிதழ் சிதர்ந்து பொன்னிறக் கொட்டை சின்னமுற் றிடவுஞ் 115 சேயிதழ் மலரினும் பாசடை யிடத்தும்
|
(23) |
| |
| |
இனிதிருந் தயர்வுயிர்த் திரைதேர் கமஞ்சூற் சங்கின மலறுபு சைவலத் தொளிப்பவுங் குரண்டமுங் கம்புளும் வெருண்ட நோக்கொடு தலைமீ தெடுத்தெடுத் தலைநீர் மூழ்கவும் 120 அஞ்சிறை யன்னமு மளியின் றொகுதியும்
|
(24) |
| |
| |
வெள்ளியம் புயலுங் கரிய மங்குலும் பரந்தன வெழுந்து கரந்தன விரியவும் விரிகதிர் ஞாயிற்றின் வெயில்பெற வேட்டுக் கோட்டருகு கிடந்த கூன்முது காமை 125 கைய தெறிந்தென வொய்யென வீழ்ந்து
|
(25) |
| |
| |
கீழ்நீர்ப் புகவுங் கிளர்பெருந் திரையெழுந் தோங்கிருங் கரைமிசைப் பாய்ந்தன புரளவுந் துடுமென வீழ்தரக் கடுவிசை வாள்புரை வாளை பாயுந் தாள தா மரைத்தடத் 130 தாடுநர் வீழ்த்த வவிரொளி மணிப்பூண்
|
(26) |
| |
|
| |
21.01. இன்னல் அம்பிறவி-துன்பம் பொருந்திய அழகிய பிறப்பு. 102. தளை அகற்றி-விலங்கைப் போக்கி. 104. துஞ்சினோர்-இறந்தோர். 105. நோன்பு உழந்து-விரதங்களில் வருந்தி. இமயம்-இமயமலை. 22.07. ஒப்புமை-சமம். 108. பன்னரும்-சொல்லுதற்கரிய. 23.11. தாழை-தென்னையின்.113. அழனிறத்தாமரை-செந்தாமரை. சிதர்ந்து-சிதறி. 114. கொட்டை-தாமரையிலுள்ள தவிசு. சின்னமுற்றிட-பழுதடைய. 115. பாசடை-பசிய இலை. 24.16.கமம்சூல் சங்கினம்-நிறைந்த சூலையுடைய சங்குக் கூட்டம். 117. அலறுபு-அலறி. சைவலம்-பாசி. 118. குரண்டம்-நீர்க்காக்கை. கம்புள்-சம்பங்கோழி. 120. அளியின் தொகுதி-வண்டுகளின் கூட்டம். 25. வெள்ளியம்புயல்-வெள்ளியமுகில். மங்குல்-முகில். 123. வேட்டு-விரும்பி. 124. கோட்டருகு-கரையருகு. 26. துடுமென-திடீரென. வாள்புரை-வாளைப்போன்ற. 130. ஆடுநர்-நீராடுவோர். வீழ்த்த-போகட்டுவிட்ட.
|
|
|
|