| 23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
| |
நீர்க்கீழ்ப் படர்ந்த நெடுந்துகிர்க் கொடியென நனிகிடந் திமைக்கும் பனிபடு நறுமலர் மல்லலம் பசும்பொழிற் றில்லையம் பலமும் கவையடி வெடிவாற் குவிமுலை மேதி 135 மனையுழைக் கன்றை நினைதொறுஞ் சொரிந்த
|
(27) |
| |
| |
வெண்பா லருந்திய செங்கா லன்னந் தாமரைத் தவிசின் மீமிசை யுறங்குங் கண்ணகன் கழனி விண்ணக டுரிஞ்சு நொச்சிசூழ் கிடந்த கச்சிமா நகரமும் 140 தண்டளிர்க் கோட்டுப் பிண்டிமுதல் பெயர்த்து
|
(28) |
| |
| |
வெறிகமழ் சந்தனச் செறிவுகெட முருக்கி விண்புகு நெடுஞ்சினைச் சண்பகஞ் சாடிக் காழுடை யகிற்றிரள் வீழ்தர நூக்கி மங்குல்கண் படுக்குங் குங்குமஞ் சாய்த்து 145 மிளிர்மணி யருவிக் குளிர்புனன் முகந்து
|
(29) |
| |
| |
தூம்புடை நெடுங்கையிற் றூய்விளை யாடும் ஈர்ங்கவுட் புகர்முகக் கூர்ங்கோட் டுரற்கால் வெஞ்சினக் குஞ்சர மஞ்சுவரு நெஞ்சொடு பசுந்தழை பொதுளிய விசும்புற நிமிர்ந்து 150 வாரியுண் டெழுதரு மழையொடு முரணும்
|
(30) |
| |
| |
புதுவேய்ப் பொதும்பரிற் கதுமென வொளிக்க அடங்கருஞ் சினத்து முடங்குளை நோன்றாட் பெருவலி யரிமா னுருமென வதிர்க்கும் அணிகிள ரடுக்கத் தருணையங் கிரியும் 155 மணிவரன் றருவிவீழ் மல்லிகார்ச் சுனமும்
|
(31) |
| |
|
| |
27. துகிர்க்கொடி-பவழக்கொடி. 132. பனிபடு-குளிர்ச்சி பொருந்திய. 133. மல்லல்-வளப்பம். 134. கவையடி-பிளவுபட்ட அடி. மேதி-எருமை. 135. மனையுழை-வீட்டிடத்துள்ள.28. நொச்சி-மதில். 140. கோடு-கிளை. பிண்டி-அசோகு. 29. வெறி-மணம். செறிவு-நெருக்கம். முருக்கி-அழித்து. 142. நெடுஞ்சினை-நீண்ட கிளை. 143. காழ்-வயிரம். நூக்கி-அழித்து. 144. மங்குல்-முகில். கண்படுக்கும்-உறங்கும். 30. தூம்பு-துளை. தூய்-தூவி. 147. ஈர்ங்கவுள்-மதத்தால் நனைந்த கன்னம். 148. குஞ்சரம்-யானை. 149. பொதுளிய-நெருங்கிய. 150. வாரி-கடல். மழை-முகில் . முரணும்-மாறுபடும். 31. பொதும்பர்-மரச்செறிவு. 153. உரும்என-இடியைப்போன்ற. 155. வரன்று அருவி-வாரிக்கொண்டு வரும் அருவி.
|
|
|
|