முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         சோதி மாமரஞ் சுடுதழற் பிழம்பென்
         றிளமட மந்தி யேறா தகலுந்
         திருக்கா ளத்தியா முருக்கிளர் பொருப்பும்
         மீன்கணத் தகவயின் விளங்குவெண் டிங்களின்
160       ஒழுகொளி நித்திலக் குழுவினுள் வலம்புரிச்
(32)
         சங்குகிடந் துறங்கும் பொங்குபுனற் பழனத்துக்
         கரும்படு களம ரிரும்பு கைவிடுத்
         தடிபெயர்த் தோடிக் குடவளை யிடறி
         எழுநீர்ப் பசுந்தாட் கழுநீர்க் குப்பையுள்
165       வண்டினம் வெரீ இயொலி கொண்டெழ வீழ
(33)
         நெடுநெறிக் கரும்பி னெருக்கிடைக் கிடந்த
         கடுவரா லுகளுங் கம்பலை யவியா
         ஒருவாச் செல்வத் திருவா ரூரும்
         ஆரங் குங்கும மகில்கரி மருப்புப்
170      பொன்மணி முதலிய பொருதிரைக் கையால்
(34)
         விரிபொழில் நிமிர்ந்ததன் னிருகரை மருங்கினும்
         வாழ்நர்க் குதவு மணிமுத் தாறெனும்
         பெருநதி யுடுத்த திருமுது குன்றமும்
         வரைபக வெறிந்து மாமுத றடிந்த
175      மணிநெடு வேலொடு வளர்பூங் குடுமி
(35)
         முள்ளுடை நெடுந்தாட் புள்ளணி கொடியோன்
         வள்ளிபுரை மருங்குல் வள்ளிமா துக்குஞ்
         சேயரி நெடுங்கட் டெய்வயா னைக்குங்
         காணியென விளங்கும் பூணணி மார்போன்
180      அருணனி சுரக்கு மறுமுகத் தொருவன்
(36)

32. தழற்பிழம்பு-தீச்செறிவு. 158. உருக்கிளர்-அழகு விளங்குகின்ற. 159. அகவயின்-நடுவிடத்தில். 33. குடவளை-குடம்போன்ற சங்கு. 165. வெரீஇ-அஞ்சி.34. கம்பலை அவியா-ஒலி நீங்காத. உகளும்-புரளும். 168. ஒருவா-நீங்காத. 35. வரைபக-மலை பிளக்க. 36. புள்ளணி கொடியோன்-சேவற் கொடியோன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்