முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
23. கருணைப்பிரகாசசுவாமிகள்
         தன்னிக ரில்லாத் தனிமுதற் கடவுள்
         வெட்சிமலர் சூழ்ந்ததன் விரைமலர்த் திருவடி
         உள்ளுநர் தமக்குங் கள்ளவிழ் சேயிதழ்
         அல்லியந் தாமரைச் செல்வனும் வணங்கும்
185      பெறலரு மரசு பெறவினி தளிப்போன்
(37)
         தேங்கமழ் கடம்பின் றெரிய றுயல்வரூஉம்
         பன்னிரு தடந்தோட் பண்ணவ னிருந்த
         பனியிரு விசும்புதோய் பரங்குன் றிழியும்
         மணியருவி கொழித்த மணிகிடந் திமைக்குந்
190      திருமலி மறுகிற் செந்தமிழ்க் கூடலும்
(38)
         தமிழ்குடி யிருந்த தடவரைத் தோன்றி
         இமிழ்திரை ஞாலத் தமிழ்தெனக் கிடந்த
         தண்பொருநை யுடுத்த விண்பொரு நெடுமதில்
         நெல்லையு முதலிய பல்பெரும் பதிகள்
195      அனைத்தினுங் கண்டோர்க் ககற்றரும்
(39)
196.      வினைத்தொடர் பகல வீற்றிருந் தெனவே.
(40)

37. உள்ளுநர்-எண்ணுபவர். 38. துயல் வரூஉம்-அசையும். 39. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.40. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்