24. திருவெங்கை மான்மியம் |
|
|
நடுநாட்டிலே,* துறைமங்கலத்திலே, முந்நூறு வருடங்கட்கு முன்னரே, பண்டகுலத்திலே, வல்லகோலாதிபதி யென்னும் பட்டப்பெயர் பெற்றுக் குறுநிலமன்னராய் இலிங்கா ரெட்டியார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் கல்வியறிவொழுக்கங்களினும், குருலிங்கசங்கம பத்தியினும், வீரசைவா நுஷ்டானத்தினும் மிகச் சிறப்புற்றவராய் வாழுநாளில், பிரதோஷகாலத்திலே, சிவதரிசனஞ்செய்தே போசனஞ் செய்யவேண்டுமென்னும் நியமமேற்கொண்டு, தமது நகரத்திற்கும் விருத்தாசலத்திற்கும் ஏறக்குறைய நான்குகாவதமிருக்கவும், அத்தலத்தில் வீற்றிருக்கும் பழமலை நாதரிடத்தும் பெரிய நாயகியம்மையாரிடத்தும் அத்தியந்த பத்தியுடையராய்ப் பிரதோஷகட்டளையேற்படுத்தி, தமது அருந்தவத்தாலுதித்த அண்ணாமலை ரெட்டியாரென்னும் சற்புத்திரரோடு, அப்புண்ணிய காலந்தோறும் தவறாமற்சென்று, தரிசனஞ்செய்து வந்தார். அங்ஙனஞ் செய்துவருநாளிலே ஒருநாள், பிரதோஷ தினத்திலே தரிசனத்தின் பொருட்டுத் தமது புத்திரரோடு புறப்பட்டுவருங்கால், பேராறு என்கிற வெள்ளாறு இருகரையும் பெருகி ஓடமுதலியவும் செல்லுதற்கும் இடங்கொடாதிருப்பதை நோக்கி, இலிங்காரெட்டியார் மனம் நைதலோடு, “யாங்கள் சிவபெருமானுக்குத் தொண்டராயின் இந்நதி வழிவிடுக; இன்றேல், இதிலிறப்பதே உறுதி” எனப் பிரதிஞ்ஞை செய்து கொண்டு, துணிவோடு அந்நதியிலிறங்கலும், அது சிவ பெருமான் றிருவருளால் வழிவிடக்கண்டு, “எளியேங்களிடத்தும் எம்பெருமான்றிருவருள் இருந்தவாறு என்னை!” என்று வியந்து, புத்திரரொடுசென்று, பழமலைநாதரையும் பெரிய நாயகியம்மையாரையும் தரிசித்து, மனமுருகிப் பலவாறு துதித்து, தமக்குச் சிவபெருமான்பாலித்த திருவருளைச் சிந்திக்குந்தோறும் பேராநந்தமுடையராய், அத்தலத்திலேயே தங்கினார். அன்றிரவிலே, பழமலைநாதர் அவர்கள் சொப்பனத்திலே, ஒரு சிவனடியார்போலத் தோன்றி, “நீங்கள் ஏன் இவ்வாறு கஷ்டத்தை யடைகின்றீர்கள்; யாம் உங்கள் ஆளுகையிலமைந்த திருவெங்கை நகரத்திலே இன்ன * இது வாலிகண்டபுரத்திற்குத் தென்பாகத்திலுள்ளது. இது வாலிகண்டபுரத்தின் வடமேற்பாகத்திலே திருவெங்கனூரென வழங்குகின்றது.
|
(1) |
|
|
|
1. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.
|
|
|
|
|