| 1. சோணசைலமாலை |
|
| |
மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு மதர்விழிக் கடலினு மளகக் கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக் கதியிடை நடத்துமா றெளிதோ செங்கதிர் காலை மாலையுந் தங்கச் சிலம்புள வெனக்கடும் பகலில் தங்குற நீடி நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(84) |
| |
| |
கண்டிகைக் கலனே கலனென விழைந்து காயமே லணிந்துவெண் ணீற்றுப் புண்டரக் குறிசேர் நுதலொடு நினையான் பூசனை புரியுமா றருளாய் முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு முடிமிசை முத்துமேற் கட்டித் தண்டிரைக் கங்கை யாறுசேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(85) |
| |
| |
நாவினைந் தெழுத்து மந்திர மலாத நவிற்றுவோர் தமையுநீ யிருப்பப் பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும் பாமரர் தமையுமென் றொழிவேன். கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த குன்றமம் பாடகக் குன்றந் தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(86) |
| |
|
| |
84. குவடு-மலையுச்சி. அளகம்-கூந்தல்; கதி-வழி, இங்கு முத்தி. கடும்பகல்-உச்சிப்போது. 85. கண்டிகை என்பது கண்மணி; இதை உருத்திராக்கம் அல்லது உருத்திராட்சம் என்பர். இதைச் சிவனடியார்கள் கழுத்தில் அணிந்திருப்பர். முண்டகம்-தாமரை. 86. கோவினம்-ஆனிரை, ஆடகம்-பொன். இதைச்சொர்னம் என்பர். ஐந்தெழுத்தோதாதவரையும், மக்களைப்பாடுகின்றவர்க-ளையும் விட்டகலவேண்டும் என்பது கருத்து. தாவில்-கெடுதலற்ற.
|
|
|
|