| 1. சோணசைலமாலை |
|
| |
திங்களுங் கதிரு மிலங்கிய மானுந் திகழ்பெரும் பூதமோ ரைந்துங் கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங் கண்டுகண் களிக்குநா ளுளதோ பொங்குகுங் குலியக் கலயவா ரழலிற் புகையெனச் சரோருக வல்லி தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(87) |
| |
| |
பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள் பூதங்க ளெனவிலா தடங்க அறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி யருவினைக் குறும்பற வெறியாய் செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ் சேரமா துமைதினங் கட்டுந் தறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(88) |
| |
| |
பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து புண்ணியர்க் கருளுநின் பதங்கள் என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ லெய்திய தம்மவோ வியப்பே மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி மலைதரு மருட்பெருங் கடலைத் தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(89) |
| |
| |
நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய நெடியவ னெஞ்சகன் றிடாத தேங்கிய சோதி மன்றுளா டுவவென் சிந்தையு ணடப்பநின் பதங்கள் ஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த் துழுமளி புரியிறான் மருவித் தாங்கிய வால வட்டநேர் சோண சைலனே கைலைநா யகனே.
|
(90) |
| |
|
| |
87. இயமானு மென்புழினகரந் தொக்கது. அல்லி-அகவிதழ்கள்; இவை அழலுக்குவமை. 88. குறும்பு-வலிமை. “அரவுக் குறும்பெறிந்த சிறுகட்டீர்வை” என்பதனாலுமறிக. 89. மன்னிட-நிலைபெற்ற; மலை தருமருட்கடலென்றது உமையை; மலை கடலில் அடங்குவது இயற்கை. ஆனால் கடலாகிய உமை மலையாகிய சிவத்தினிடம் அடங்கியது என்பது முரணணி. 90. நெடியவன்-திருமால்; அளி-வண்டினீட்டம்; இறால்-தேனடை; மன்று-திருச்சிற்றம்பலம். இறால் ஆலவட்டத்துக்கும், மூங்கில் அதன் காம்புக்கும் உவமை. நீங்கிய நேயத்தவர்-அன்பற்றவர்கள்.
|
|
|
|