2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசையாசிரியப்பா |
|
|
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசக மதற்கு வாச்சியந் தூசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே.
|
(8) |
|
நேரிசைவெண்பா |
|
|
இடுகாட்டுண் மாத ரெலும்பிற் புரண்மால் சுடுகாட்டு ளாடுவாற் சுட்டி - னொடுகாட்டுஞ் சம்பந்தா வென்புநின்பாற் றந்தாக்கிக் கொண்டிலனென் கும்பந்தா மென்னுமுலைக் கொம்பு.
|
(9) |
|
கட்டளைக்கலித்துறை |
|
|
கொள்ளைக் கதிர்முத்தின் பந்தருஞ் சின்னமுங் கொள்ளமொரு பிள்ளைக் கதுதகு நாவர சாய பெருந்தகையோய் கள்ளைக் குவளை யுமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ வள்ளைக் குழையுமை பங்காளர் கையிலென் வாங்கினையே.
|
(10) |
|
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
|
வாங்குசிலை புரையுமுட லெனுங்குளத்தின் மூல மலமெனமோர் வெங்கரவின் பகுவாயி னின்றுந் தீங்கிலுயி ரெனும்பனவக் குலமகனை யாதி திரோதாயி யென்னுமொரு வெந்திறற்கூற் றுவனால் ஓங்குறுநா தாந்தமெனப் பெயரியவக் கரையி லுமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய் கோங்கமுகை கவற்றுமிள முலைப்பரவை மகிழக் குண்டையூர் நென்மலைமுற் கொண்டவருட் கடலே.
|
(11) |
|
|
|
8. வாச்சியம்-வாசகத்தாலுணர்த்தப்டும் பொருள். அல்குல் வேய்த்தோள் அன்மொழித்தொகை. இடம் இடப்பாகம். தவன்-யோகி: கணவனுமாம் தூசு-ஆடை. 9. மால் என்பு தந்து கொம்பு ஆக்கிக் கொண்டிலன் என் என்க. பந்தாமென்னு முலைக்கொம்பு ஆக்கிக் கொண்டிலன் என்கும் எனக் கண்ணழித்து, சிவநேசச் செட்டியார்போல என்பைப் பந்துபோலுமென்னுந் தனங்களையுடைய பெண்ணாக ஆக்கிக் கொண்டிலனென்பர். திருமால் எனலுமொன்று. என்கும்-ஈண்டுச் செய்யுமென் முற்று. சுட்டினொடுகாட்டுமென்பதனால் அது தடத்த வடிவம் என்பது பெற்றாம். மால்-திருமால். கும்பம்-குடம். 10. அதுவென்றது படிக்காசொன்று பெறுதலை. குழை-காது. என்வாங்கினை யென்பது இறைவராஞ்ஞையை மறுத்தற் கஞ்சியோ என்பதுபட நின்றது. பிள்ளை என்பது ஞானசம்பந்தரை. இவரைச் சிவபெருமான் மக்கள் இருவருள் முருகப்பெருமான் அவதாரம் என்பர். கொள்ளைக்கதிர்-மிகுதியான ஒளி. வீழியில்-திருவீழிமிழலை யென்னுஞ் சிவப்பதியில். 11. வாங்க சிலையென்பது குறிப்பால் இந்திரதனுசை யுணர்த்திற்று; உடம்பு நிலையாமைக் குவமிப்பது அதுவேயாகலின். அன்றிக் கூனுங்கால் வளைந்தவில்லை நிகர்க்கு முடலெனலுமொன்று. தீங்கின்மை-அழியாமை. ஆதிதிரோதாயியென்னுமெனவே அந்தத்தில்அதுவே அருட்சத்தி யெனப்படுமென்றாராயிற்று. கூற்றுவனாலுமிழ்வித் தென்க. ஒடு கலப்புறு பொருட்கண் வந்தது. இங்ஙனமியற்றின் எவருமுய்வரென்றபடி. பகுவாய்-பிளவுபட்டவாய். பனவக்குலமகன்-பார்ப்பனச் சிறுவன். கவற்றும்-வருத்தும்.
|
|
|
|