2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசையாசிரியப்பா |
|
|
கடனிற வண்ணன் கண்ணொன் றிடந்து மறைச்சிலம் பரற்று மலரடிக் கணியப் பரிதி கொடுத்த சுருதிநா யகற்கு முடிவிளக் கெரித்துங் கடிமலர்க் கோதைச் சுரிகுழற் கருங்கட் டுணைவியை யளித்தும் அருமக ணறும்பூங் கருமயி ருதவியும் நென்முளை வாரி யின்னமு தருத்தியுங் கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும் அகப்படு மணிமீ னரற்கென விடுத்தும் பூட்டி யரிவா ளூட்டி யரிந்துந் தலையுடை யொலிக்குஞ் சிலையிடை மோதியும் மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்துந் தந்தையைத் தடிந்து மைந்தனைக் கொன்றுங் குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும் பூக்கொளு மாதர் மூக்கினை யரிந்தும் இளமுலை மாதர் வளமை துறந்தும் பண்டைநா ளொருசிலர் தொண்ட ராயினர் செங்கண்மா றடக்கையிற் சங்க நாண முட்டாட் டாமரை முறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூ ரன்ப பாடும் பணிநீ கூடும் பொருட்டு மதுரைமா நகரிற் குதிரை மாறியும் விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும் நீற்றெழின் மேனியின் மாற்றடி பட்டும் நின்னைத் தொண்ட னென்னக் கொண்டனன் இருக்கு மடுக்க லரக்க னெடுப்ப முலைபொர வரைபொரு மொய்ம்பின் மலைமக டழுவ மனமகிழ் வோனே.
|
(12) |
|
|
|
12. கடனிற வண்ணன் என்பது திருமால். கண்ணைப் பெயர்த்து மலரடிக்கு இட்டது ஆழியைப் பெறவேண்டி. சிலை-கல்; வளமை-செழுமை; இங்கு இளமைப் பருவம் இடந்து-தோண்டி, அரற்றும்-ஒலிக்கும். அடுக்கல்-மலை. அரக்கன்-இராவணன். மொய்ம்பு-தோள். சுருதிநாயகற்குத்தொண்டராயினரெனவும், மகிழ்வோனே கொண்டன னெனவும் இயையும். மாறு-பிரம்பு.
|
|
|
|
|