2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசை வெண்பா |
|
|
மகிழ்ச்சி மிகவுண்டு போலுமெதிர் வந்து புகழ்ச்சியொடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச் சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.
|
(13) |
|
|
|
13. மகிழ்ச்சி மிக வுண்டென்றது பாடிய திருநெறித் தமிழினருமையையும் தேவியாரளித்த ஞானப்பால் அதற்கேது வாதலையும்குறித்தென்க. போலும்-ஒப்பில் போலி. சந்தை-பலபண்டமுங் கொள்வான் குழுமும் சனத்தொகுதி; வேதச்சந்தையுமாம். மலரில் இரையும் என்க. புகலி-சீர்காழி.
|
|
|
|
|