முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை வெண்பா
கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்
தள்ளுந் திருஞான சம்பந்தா-வெள்ளமிடும்
ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்
காடேறப் புக்கவரு கர்.
(21)
கட்டளைக் கலித்துறை
அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப்
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
கருகக் கடல்விட முண்டோ னடியிற் கசிந்துமனம்
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த வுனக்கரிதே.
(22)

21. பிடர்பிடித்துத் தள்ளுதல்-அணுகாதகற்ற லென்னும் பொருட்டாய் உலகவழக்குப் பற்றி வந்தது. ஏடேறப் பால்குறைந்ததென்பதும் அருகரென்பதும் இரட்டுறமொழிதல். கழுவின்காடு-ஆயிரக்கணக்கான சமணர்கட்டு ஆயிரக்கணக்கானகழுக்கள் அமைக்கப்பட்டனவாதலின் கழுவின் காடு என்றார். 22. ஆவது செய்யுளாலுமுணர்க. ஓகாரமூன்றும் வினாப்பொருளவேனும் இறுதியது பிரிநிலையுமாம். போதம்-ஞானப்பால். பொருகண்-போர்செய்கின்ற கண். 20. அடியார் மெய்யன்பு-அடியார் பாற்கொள்ளும் உண்மையன்பு. வித்தக, கொள்வோய், அருளல் வேண்டும் எனவியையும். அலந்தேன்-கவலைகொண்டேன். கோடல்-கொள்ளுதல். 21. பிடர்பிடித்துத் தள்ளுதல்-அணுகாதகற்ற லென்னும் பொருட்டாய் உலகவழக்குப் பற்றி வந்தது. ஏடேறப் பால்குறைந்ததென்பதும் அருகரென்பதும் இரட்டுறமொழிதல். கழுவின்காடு-ஆயிரக்கணக்கான சமணர்கட்டு ஆயிரக்கணக்கானகழுக்கள் அமைக்கப்பட்டனவாதலின் கழுவின் காடு என்றார். 22. வினாப்பொருளவோகாரமிரண்டும் முறையே உயர்வினும் இழிவினும் வந்தன. அரிதுசொல் என்க. அம்பி-ஓடம். மிடறு-கண்டம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்