முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
உனற்க ரும்புகழ் மேவிய சுந்தர னும்பன் மீதிவரா
நினைப்ப ருங்கயி லாயம டைந்தமை நின்று காண்குறவே
எனக்கு வந்துறு மோமக வென்றழு கின்ற நாளலைபால்
தனித்த ருந்துபு மாலை யுமிழ்ந்திடு தம்பி ரானலனே.
(23)
நேரிசை யாசிரியப்பா
நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ
மனநின் றுருக்கு மதுர வாசக
கலங்குறு புலனெறி விலங்குறு வீர
திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன்
ஒருகலை யேனு முணரா னஃதான்று
கைகளோ முறிபடுங் கைகள் காணிற்
கண்களோ வொன்று காலையிற் காணும்
மாலையி லொன்று வயங்கித் தோன்றும்
பழிப்பி னொன்று விழிப்பி னெரியும்
ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த
பழுதில் செய்யு ளெழுதின னதனாற்
புகழ்ச்சி விருப்பன் போலும்
இகழ்ச்சி யறியா வென்பணி வானே.
(24)

23. காண்குற நலன் உறுமோவென இயையும். நலன்-சிவானுக்கிரகம். பால்அலை-பாற்கடல்; ஆகு பெயர். தம்பிரான்-உபமன்னிய முனிவர். உபமன்னிய முனிவர் குழந்தைப் பருவத்தில் ஆவின்பாலை விரும்பியழுதார். சிவபிரான் அம்முனிவருக்குப் பாற்கடலைக் குடிக்க வழங்கினார். அப்பொழுது பாலையுண்ட முனிவர் அதிற்பள்ளி கொண்டிருந்த மாலையுமிழ்ந்தார் என்பர். உனற்கு-எண்ணுதற்கு. உம்பல்-யானை. 24. தெய்வ நாயகர் சுருதியாதிய கலைகளுள் ஒன்றானுந் துணியப்படாதவர். அவர் கைகள் முத்தொழிற்கிணங்கத்துடியும் அபயமும் அனலமும் கோடலானும், ஒருகாற்கும்பிடிற் கதிகூடுமெனக் குஞ்சிதபாதத்தைக் குறித்தலானும் வளைவுற்றமர்வன; முறிந்தகைகள் என மற்றுமொரு பொருடோன்ற நின்றவாறுங் காண்க. சூரிய சோமநேத்திரம் அவ்வுலகிறுதியையும் தோற்றுவிப்பன; கண்கள் ஒருகாலைக் கொருகாலை குருடாவன என மற்றுமொரு பொருடோன்றுதல் காண்க. இங்ஙனமிருந்தும் தலைமை நாடாதெய்திப் பழுதில் செய்யுளை உலகினர் ஓதியுணர்ந்துய்வான் வரைந்தனர்; இவ்வுட்கிடையுணரார்க்கு இச்செயலாற் புகழ்ச்சிவிருப்பர் போலினும், ‘இகழ்ச்சி யறியா என்பணிவானே’ என்பதனால் அஃதிலர் என்பது தெரித்தவாறு காண்க. முறி-தளிருமாம். புலன்-ஐம்புலன்கள். வயங்கி-விளங்கி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்