2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசை வெண்பா |
|
|
வானும் புகழ்புகலி மன்னன் றொடர்பொன்று தேனுந் திதழியோன் சீரேடு-தானுங் கரியாய் மொழியுங் கரியாய் விடாமல் எரியா ரழல்வீழ்ந் தெழுந்து.
|
(25) |
|
கட்டளைக் கலித்துறை |
|
|
துடைவாழை மேன்மட வாரல்குற் பாம்பு தொடமயங்கி நடைவாய்ப் பிணமெனப் பட்டார் பெறுகிலர் நச்சுகுலை உடைவாழை மேலுர கந்தீண்ட மாய்ந்த வொருவனுயிர் அடைவா னருள்புரி யுந்திரு நாவுக் கரசினையே.
|
(26) |
|
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் |
|
|
அரசன் பரிமேல் வரநெடுநல் யானை யெருத்தத் தமர்ந்துபோய் வரதன் கைலை மலையடைந்த மணியே மணிநீ ரிடுபசும்பொன் திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும் பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.
|
(27) |
|
நேரிசை யாசிரியப்பா |
|
|
பகிர்மதி தவழும் பவளவார் சடையோன் பேரருள் பெற்றும் பெறாரி னழுங்கி நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே பேயேன் பெறாது பெற்றார் போலக் களிகூர்ந் துள்ளக் கவலைதீர்ந் தேனே அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை வாதவூ ரன்ப வாத லாலே தெய்வப் புலமைத் திருவள் ளுவனார் நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலரெனுஞ் செஞ்சொற் பொருளின் றேற்றறிந் தேனே.
|
(28) |
|
|
|
25. தொடர்பு ஒன்று ஏடுதானும் அழல்வீழ்ந்து கரியாய் விடாமல் எழுந்து கரியாய் இதழியோன் சீர்மொழியும் எனக்கூட்டுக. தொடர்பு-திருப்பதிகம். சீர்-பரத்துவம். கரி-சான்று. எழுதல்-முன்னையினும் பசந்து விளக்கமடைதல். தொடர்பு-பாடல். இதழி-கொன்றைமாலை. கரி-அடுப்புக்கரி; சாட்சி. 26. பூர்வம் வழிபட்டிருப்பாரேல் மாநிலத்துதித்து மயங்கி யழாராகலின் உழல்வாரெல்லாம் திருநாவுக்கரசினை வழிபடுதல் பெறுகிலரேயென்பது. வழிபடுதல் சொல்லெச்சம்; “பெற்றாற்பெறிற் பெறுவர்” என்னுந் திருக்குறளிற்போல. பட்டார் திருநாவுக்கரசனைப் பெறாதவரே ஆவார் எனலுமொன்று. நடைவாய்ப் பிணம்-வினைத்தொகை. நச்சு உரகமென்க. நச்சுங்குலையுமாம். உரகம்-பாம்பு. அடைவான்-மீளவும் பெறுமாறு. 27. வரதன்-வரத்தைக் கொடுப்பவன். ஆற்றிடுபொன் குளத்துவரவும், செங்கற் செம்பொனாகவும் பாடும் பரிசை அறிந்து வைத்தலின்றி இயற்றலின், ஆவலுடையனல்லே னென்பார் பரிசு சித்திக்கப் பகர்வாயென்னாது பரிசுபகர்வாயென்றார். பரிசு-அருட்டன்மை. எருத்தம்-பிடரி. மணிநீர்-மணிமுத்தாநதியின்நீர். 28. நீ அழுங்கி உருகிநிற்பை, பேயேன் கவலைதீர்ந்தேன், ஆதலால், என்பதுஏது. பொருளின் தெளிவறிந்தேனென்பது பிரதிக்ஞை. செஞ்சொல்-திருக்குறள். தேற்றம் ஈறுகுறைந்தது. அழுங்கி-வருந்தி.
|
|
|
|