2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசை வெண்பா |
|
|
தேனே றலர்சூடிச் சில்பலிக்கென் றூர்திரியும் ஆனேறி யாண்டுப்பெற் றான்கொனீ-தானேறும் வெள்ளைமணி யென்று வினாவுவோம் வாங்கியவப் பிள்ளையையாங் காணப் பெறின்.
|
(29) |
|
கட்டளைக் கலித்துறை |
|
|
பெற்றா னினைப்பெற் றவர்போற் பெறலும் பிறப்பதுண்டேல் நற்றா ரணியி னினைப்போற் பிறப்பது நல்லகண்டாய் செற்றார் புரமெரி செய்தவில் வீரன் றிருப்பெயரே பற்றா மறிவெண் டிரைக்கட னீந்திய பாவலனே.
|
(30) |
|
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் |
|
|
பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிநீ சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிற் றறிவார் கடாவிவரு மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.
|
(31) |
|
|
|
29. சில்பலி-சிறுபலி. ஆனேறி பெயர். பலிக்கென்றென்பது உள்ளபடி பலிக்குச் சென்றதன் றென்பதும், யாண்டுப் பெற்றானென்பதும், யாண்டும் பெற்றிலனென்பதும் பட நின்றன. பெறுதல் அதன் காரியமாகிய ஈதலையு முணர்த்திற்று. வெள்ளைமணி-ஆகுபெயர். அகரம் தலைமைச் சுட்டு. இது நிந்தாஸ்துதியாகவும் நிற்பதறிக. தேனேறலர்-தேன்பொருந்தியமலர். வெள்ளைமணி-முத்துப்பந்தல். 30. பெறின், உன்னைப் பெற்றவர்போல உன்னையொத்த புதல்வனைப் பெறுதலும், உதிப்பின் உன்னைப் போல ஒரு புதல்வனாகி யுதித்தலுமே சிறந்தன என்பது. கண்டாய்-முன்னிலையசை. செற்றார்-பகைவர். 31. வான் அமுதம் பாவாகப் பொழிந்த நம்பியெனவும், தரும தேவதையைப் பொருதுஞ் சேவாகவுடைய தேவன் எனவுங் கொள்க. வான் அமுதம்-பரமுத்தி; அது, ஈண்டு அதன் சாதனங்களின் மேற்று. காவாய்ப் பயந்த-கற்பகதருவைப்போல வேண்டிற்றுதவிய. மாவாய்ப் பிறக்கும்-இக்கலியுக முடிவிற் குதிரையாயுதிக்கும். பாவாய்-பாடலாய். சே-எருது. கா-கற்பகமரம். மா-குதிரை.
|
|
|
|