முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை யாசிரியப்பா
திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நீழல்வா யுண்ட நிகரிலா னந்தத்
தேன்றேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரு மோது மியற்கைத் தாதலின்
பொற்கல நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கு மதுர வாசகம்
ஓதின் முத்தி யுறுபயன்
வேத மோதின் மெய்ப்பய னறமே.
(32)
நேரிசை வெண்பா
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை-மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து.
(33)

32. தேக்கு என்பது இங்கு, உவட்டல், மதுரம்-இனிய. உறு-அடையும். திருவாசகத்தின் இனிமையுணர்ந்து பலருமோதுதலின் யாவருமோ துமியற்கைத் தாதலினென்றார். திருவாசகத்தினை யோதின் முத்தி கிடைக்குமென்றும், வேதமோதின் மெய்ப்பயனாக விண்ணுலகப் பயன்களே கிடைக்குமென்றுங் கூறுதலால், வேதமோதலை விடத் திருவாசகமே யோதத்தகுவது என்பதாம். நிகரில் ஆனந்தம்-சிவானந்தம். அறமென்றது அறப்பயனாகிய சுவர்க்காதிகளை. 33. சிவிகை பரித்தார் இப்பொழுதுஞ் சிறந்த தேவராய்த் திரிகின்றாராகலான் “அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை” எனுந் திருக்குறளை மறுத்தாரென்க. ஆகலானென்பது சொல்லெச்சம். உந்துஞ்சிவிகை. இன்னவிடத்திற் செல்க வென்ற துணையானே ஆண்டுச் சேறற்குரிய தேவயானம். திரிகின்றாரென்னாது திரிகுவரென்றார். விழாவில் இப்பொழுது பரித்தாரும் தேவராவரென்பதறிவித்தற்கு. பரித்தார்-தாங்கியவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்