| 2. நால்வர் நான்மணி மாலை |
|
| நேரிசை யாசிரியப்பா |
| |
| |
செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூ ரன்ப பாவெனப் படுவதுன் பாட்டுப் பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.
|
(40) |
| |
|
| |
40. இப்பாவால், பூவிற் சிறந்தது செந்தாமரை யாதல் போல, பாவிற் சிறந்தது வாதவூரர் பாவே என்பர். வார்-நீண்ட, தெய்வசிகாமணி-தெய்வங்கட்குத் தலைவன் சிவபெருமான். பூ. இங்குச் செந்தாமரைப் பூ. இது மிகுந்த அழகுடையது. இதன் அழகைக் கண்டே திருமகள் இதில் உறைகின்றனள் என்பர் கோவையுரையாசிரியர். பொறி-திருமகள்.
|
|
|
|
|