3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
[அந்தாதி யாவது ஒருபாட்டினுடைய அந்தம் அடுத்த பாடலுக்கு ஆதியாகவருமாறு பாடுவதாகும். இவ்வந்தாதி வெண்பாவா லாயினுங் கட்டளைக் கலித்துறையாலாயினும் பாடப்பெறும். வெண்பாவாற் பாடப் பெறுவது வெண்பாவந்தாதி யெனவுங் கட்டளைக்கலித்துறையாற் பாடப்பெறுவது கலித்துறையந்தாதியெனவும் வழங்கும். முப்பதுபாடல்களினாலும் நூறுபாடல்களினாலும் அந்தாதிபாடப்பெறும். நிரோட்டகயமகவந்தாதி என்பது நிரோட்டகமும் யமகமுமாகப் பாடப்பெறும். நிரோட்டகமாவது இதழ்முயற்சியாற் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வராமற்பாடப்படுவது. யமகமாவது அடி முதலெழுத்தோடு இரண்டெழுத்துமுதற் பத்தெழுத்திறுதியாக ஓரடிபோலவே நான்கடியும் பாடப்பெறுவது. முப்பது பாடல்களாலாகிய இக்கலித்துறையந்தாதி திருச்செந்தூரில் எழுந்தருளிய முருகப்பெருமான் மீது பெருந் தமிழ்ப் புலவர்களும் வியக்குமாறு அருந்திறலைக்காட்டிப் பாடப்பட்டுள்ளது. இந் நூல்கற்பவர்கட்குக் கழி பேருவகை யளிப்பதாகும்.] |
|
|
|
காப்பு |
|
|
கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச் செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு முற்ற வருணனை யந்தாதி யென்பது முதிர்மதப்பேர் பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.
|
|
|
நூல் |
|
|
யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே.
|
(1) |
|
|
|
கொக்குரு-மாமரவடிவம். செற்ற-கொன்ற. அருணன்-கதிரவன். முற்ற-முடிய. அருள்நனை-அருள்வெள்ளமானது நனைக்கப்பெற்ற. நிரோட்டக யமக வந்தாதி-நிரோட்டகமும் யமகமுமாகப் பாடப்பெறும் அந்தாதி. நிரோட்டகமாவது இதழ்முயற்சியாற் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வராமற் பாடப்பெறுவது, யமகமாவது அடிமுத லெழுத்தோடு இரண்டெழுத்து முதற்பத்தெழுத் தீறாக ஓரடி போல நான்கடியும் பாடப்பெறுவது. இக்காப்புச் செய்யுள் நிரோட்டகமுமன்று யமகமுமன்று.1. யானைக்கண் தங்குஅரி-இந்திரன். ஐக்கண்டம்-அழகையுடைய கழுத்து. தகைஆன்-பெருமை தங்கிய இடபம். ஈநல்இசையான்-பிரணவப் பொருளைக் கூறிய பெருமை யுடையவன்.
|
|
|
|