3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
தரணி யனைய நிறத்தண்ண லாரிரந் தன்றளந்த தரணி யனைய னிறைஞ்சயி லார்நற் றனிச்சிலையாந் தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந் தரணி யனையனெஞ் சேயலர்த் தாள்கட ரித்திறைஞ்சே.
|
(16) |
|
|
தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந் தரித்தனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந் தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா ததிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே.
|
(17) |
|
|
சங்கரி யக்க நிகர்த்தநின் றாதை ததையதென்னச் சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானனகஞ் சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சரணத்தினாற் சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே.
|
(18) |
|
|
தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேய்ந் தகர னலங்க னளினா தனத்தினன் றாழளகந் தகர னலங்க டரநின்ற சத்தியன் றாளெனினந் தகர னலங்கனன் றாலெனச் சீறிட தக்கரன்றே.
|
(19) |
|
|
தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந் தக்க னகத்தி கிரிக்கர னாக்கங்க டந்தளிக்கத் தக்க னகத்தி யளையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந் தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே.
|
(20) |
|
|
|
16. தரணி அனைய-கதிரவனைப் போன்ற. தரணியன்-திருமால். அயன்-நான்முகன். ஐஅநகன்-அழகனையுடைய மலரகிதர். அணி அல்-அழகிய அரண். 17. தரிக்க-அணிய. நந்து-வளர்தலையடைந்த. அம்கலை-அழகிய திங்கட்கலை. கைக்கனல் சங்கரன்-கையிலே தீயை உடைய சிவபிரான். அக்கரி-உமாதேவி. அனந்தம்-முடிவில்லாத. இக்கு-கரும்பு. தளை ஆதரிக்க-மாலையை விரும்ப. கலைநீத்து-ஆடையைப் போக்கி. கரச்சங்கங்கள்-கைவளையல்கள். 18. சங்கரி அக்கம்-உமாதேவியின் கண். சங்கு அரி-சங்கையுடைய திருமால். சரணத்தினால் சங்கரி-அடிகளினால் கொன்றருள். எற்செறி-என்னிடத்தே வந்து சேருகின்ற. 19. தகரன்-ஆட்டு ஊர்தியை உடையவன். நிறத்தான்-அழகையுடையவன். நளினாதனத்தினன்-தாமரையை இருக்கையாகவுடைய நான்முகன். அளகம்-கூந்தல். தகரநலம்-மயிர்ச் சாந்தாலாகிய இன்பம். சத்தியன்-கிரியாசத்தியாகிய தெய்வானையம்மையை உடையவன். அனலம்-வடவைத் தீ. 20. அகத்தின்அடல்-ஆணவத்தினது வலிமை. சந்தக் கனகத் திகிரிக்கரன்-அழகிய பொன் மயமான உருளைப்படையை ஏந்தியகையை உடைய திருமால். தந்து அளிக்கத் தக்கள்-கொடுத்துக் காப்பாற்றக் கூடியவர். நகு-விளங்கு கின்ற. தினகரன்-கதிரவன்.
|
|
|
|