| 4. பழமலையந்தாதி |
|
| |
மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க வயங்குமருள் நூலைக் கலுழ வொழியெனு மேற்றிவர் நோன்மையனாழ் பாலைக் கலுழ வொருமகற் கீந்த பழமலையான் மூலைக் கலுழ நடம்புரி வானெம் முதற்றெய்வமே.
|
(15) |
| |
| |
தெய்வசி காமணி யேமணி கூடலிற் சென்றுவிற்ற மெய்வசி காமணி கண்டா பழமலை வித்தகமீன் நெய்வசி காமணி மாவெனுங் கண்ணியை நெஞ்சகத்து வைவசி காமணி னோவா தெனையின்ப வாழ்வளித்தே.
|
(16) |
| |
| |
வாழ மரிக்கு மடநெஞ்ச மேமென் மலர்ப்பகழி தாழ மரிக்கு மதற்காய்ந்த தந்தையுந் தாயுமொரு வேழ மரிக்கு மிகவுற வாம்பழ வெற்பினயல் சூழ மரிக்கு மியல்பையெஞ் ஞான்றுந் துணிந்திலையே.
|
(17) |
| |
| |
துந்துமி யும்ப ரியம்பும் பழமலை சூழ்ந்துரையீர் நுந்துமியும்பரி யாவியை வேண்டியுண் ணோம்புலவீர் சிந்துமி யும்பரி வாலுத வார்த்துதி செய்விர்மலம் உந்துமி யும்பரி பாகமுண் டோசொல்லு முங்களுக்கே.
|
(18) |
| |
|
| |
15. மாலை-திருமாலை. நொய்யோன்-கனமற்றவன். கலுழன்-கருடன். கல்-கற்றுக் கொள். உழவு ஒழி-பிறவித் துன்பங்களை நீக்கிக் கொள். கலுழ-அழ. ஒருமகற்கு-உபமன்னிய முனிவருக்கு. மூலைக்கு அல்உழ நடம் புரிவான்-உள்ளத்திலேயுள்ள மலவிருளைப் பிளக்கவே கூத்தியற்றுவான். மூலை-உள்ளிடத்தை உணர்த்திற்று. 16. கூடல்-மதுரை. மெய்வசிகா-உண்மையான வைசியரே. நெய்வசி-நெய்தடவிய வாள். காமணிமா-சோலையில் உள்ள அழகிய மாவடு. வசி-வசித்தருளும் வைசிகன் என்பது வசிகன் என மருவியது. 17. மரிக்கும்-எண்ணும். மலர்ப்பகழி-மலர்க்கணை. இக்குமதன்-கரும்புவில்லையுடைய காமன். வேழம்-யானை. அரி-சிங்கம். மரிக்கும்-இறக்கும். முதலாவதடியில் ஸ்மரிக்கும் என்னும் வடமொழி மரிக்குமென நின்றது. 18. துமியும்-தும்மினும். பரி-நீங்குகின்ற. உள்நேரம்-மனம் வருந்தும். சிந்து உமியும்-சிந்திப்போகிற உமியையும். பரிவால்-அன்பால். உம்பர்-தேவர்கள். துந்துமி இயம்பும்-தேவதுந்துபியை முழக்கும். துமியும் கெடும். பரிபாகம்-நீக்கம்.
|
|
|
|